பேக்கரி உற்பத்திகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்: என்.கே.ஜெயவர்தன
புதிதாக கொண்டுவரப்பட்ட வரி முறையின் அடிப்படையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்க தலைவர் என்.கே. ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், நாட்டின் பல பாகங்களிலும் அநேகமான பொருட்களுக்கு இவ்வாறான விலை அதிகரிப்புகள் காணப்படுகின்றன.
அதற்கமைவாக பேக்கரி உற்பத்திகளின் விலைகளையும் 5 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த விலை உயர்வு குறித்து பேக்கரி உரிமையாளர் சங்கம் இந்த விலை உயர்வுகள் தொடர்பில் உரிய முறையில் நுகர்வோர் அதிகார சபைக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அதிகார சபைக்கு தெளிவுபடுத்தாமல் விலைகள் உயர்த்தப்படும் பட்சத்தில் நுகர்வோர் அதிகார சபையினால் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்படும் என நுகர்வோர் அதிகார சபை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் என்.ஜே.ஜெயவர்தன தெரிவிக்கையில்,
நாடு பூராகவும் கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்காமல் வெறுமனே சுற்றிவளைப்பை எவ்வாறு நுகர்வோர் அதிகார சபை மேற்கொள்ள முடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பேக்கரி உற்பத்திகளின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும்: என்.கே.ஜெயவர்தன
Reviewed by NEWMANNAR
on
January 12, 2016
Rating:

No comments:
Post a Comment