மன்னார் விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினரினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மிட்பு-ஒருவர் கைது-படம் இணைப்பு
பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதியுடன் கிளிநொச்சியில் வைத்து நேற்று(11) திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் இளைஞர் ஒருவரை மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.யூ.ஹேரத் தலைமையில் பொலிஸ் சாஜன் கமகே(25405),மற்றும் பொலிஸ் கொஸ்தபிள்களான விக்கிரமசிங்க(33158), ரத்னாயக்க(74157),சசிக்குமார்(89049), சுமித்(35802), ஸ்ராலின் (5938), உப்புள்(16511) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் துரித கதியில் செயல்பட்டு குறித்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும் கைது செய்தள்ளது.
மீட்கப்பட்ட இரு கேரலா கஞ்சாப்பொதிகளும் 4 கிலோ கிராம் எடை கொண்டது என மன்னார் மாவட்ட விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட இலுப்பைக்கடவை பகுதியில் வைத்து குறித்த நபரை கைது செய்ய முற்பட்ட போதும் குறித்த நபர் மோட்டார் சைக்கிலில் தப்பிச் சென்ற போது கிளிநொச்சி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
-தற்போது குறித்த நபர் மன்னார் பொலிஸ் நிலையத்தின் விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவில் வைத்து விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டு வருவதாகவும் விசாரனைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் உப பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.யூ.ஹேரத் தெரிவித்தார்.
மன்னார் விசேட போதைவஸ்து குற்றத்தடுப்பு பிரிவினரினால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா மிட்பு-ஒருவர் கைது-படம் இணைப்பு
Reviewed by NEWMANNAR
on
January 12, 2016
Rating:
No comments:
Post a Comment