ஒற்றையாட்சி முறையை ஏற்கப்போவதில்லை : இரா.சம்பந்தன்...
நீண்டகாலமாக புரையோடிப்யோருக்கும் இனப்பிரச்சினைக்கு தீர்வாக ஐக்கிய இலங்கைக்குள் பகிரப்பட்ட இறையாண்மையில் அதியுச்ச சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றே அவசியமாகும். இதனையே நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம். ஒற்றை ஆட்சிக் கோட்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சூளுரைத்துள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிடக்கூடாது. முஸ்லிம்களையும் அரவணைத்துக்கொண்டு சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளாது நீடித்த நிலையான தீர்வொன்றை பெற்றுக்கொள்ளவேண்டும். எமது மக்கள் ஏற்காத எதனையும் நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லையென்பது உறுதியானதெனவும் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் விடேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. காலை ஆரம்பமான இக்கூட்டத்தில் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர்கள், வடக்கு கிழக்கை பிரதிநிதிதித்துப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஷ்வரன், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
ஒற்றையாட்சி முறையை ஏற்கப்போவதில்லை : இரா.சம்பந்தன்...
Reviewed by Author
on
January 22, 2016
Rating:

No comments:
Post a Comment