மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 3 வருடங்களின் பின் இன்று -2016
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 3 வருடங்களின் பின் இன்று காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ். தேசப்பிரியவின் ஒருங்கிணைப்பின் கீழ் இடம் பெற்றது.
ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத நிலையில் ஏனைய ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர்களான அமைச்சர் றிஸாட் பதியுதீன்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் இணைத்தலைமையில் குறித்த மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் கலந்து கொண்டதோடு பிரதேசச் செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்டதில் உள்ள 05 பிரதேசத்தினையும் 12பிரதான தினணக்களங்கள் உள்ளடக்கியதாக மன்னார் மாவட்டத்தில் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, குடி நீர், மின்சாரம், விவசாயம், மீன்பிடி போன்ற துறைகள் குறித்தும் மேலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
அத்தோடு மன்னார் மாவட்டத்தில் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த நிலையில் மீள் குடியமர முடியாத நிலையில் உள்ள மக்களை மீள் குடியேற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.
மேலும் மாவட்டத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள பாடசாலைகளை முன்னேற்றுவது தொடர்பாகவும், அப்பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல விதமான பிரச்சினைகள் குறித்தும் உரிய அதிகாரிகளோடு கலந்துரையாடப்பட்டுள்ளதோடு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்கள் கூட்டாக கோரிக்கை முன் வைத்தனர்.
பிரதான திட்டங்கள் முன்வைப்பு தீர்வு....
- இந்திய மீனவர்களின் டோலர் மீன்பிடியினை முற்றாக தடை செய்தல்
பாரிய மண் அகழ்வினை தடுத்தல்- பின் தங்கிய கிராமங்களின் மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்துதல்
- தேவன்பிட்டி வாழ் மக்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தினை கருத்திற் கொண்டு அரச காணியை இனம் கண்டு 50ஏக்கர் காணியை 1ஏக்கர் வீதம் மிகவும் வறியவர்களுக்கு பிரித்து கொடுத்தல்.
- தனி நபர் ஒருவருக்கு 50ஏக்கர் காணியை விட மேலதிகமாக இருக்கின்றவர்களின் விபரம் திரட்டல்,
மன்னாரில் சட்டவிரோதமாக இடம் பெறுகின்ற அனைத்து குற்றச்செயல்கள் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனுக்குடன் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் காவல் துறையினர் கடற்படையினர் பாதுகாப்பு படையினர்
மன்னார் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் கடந்த 3 வருடங்களாக இடம்பெறாது இருந்த நிலையில் மூன்று கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்கள் 3 பேர் ஒற்றுமையுடன் எவ்வித கருத்து முரண்பாடுகளும் இன்றி ஒற்றுமையாக அபிவிருத்திக்குழு கூட்டத்தை நடத்தியமை விசேட அம்சமாகும்.
2015 ஆண்டு அபிவிருத்தியை விட 2016ஆண்டு அபிவிருத்தி செயற்பாடுகள் சம்மந்தமாக காரசரமான விவாதங்கள் இடம் பெற்றது இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தால் மன்னார் மிகவிரைவில் அபிவிருத்தியினை சிறப்பான மாவட்டமாக அமைந்து விடும் ....
---மன்னார் விழி---
மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் கடந்த 3 வருடங்களின் பின் இன்று -2016
Reviewed by Author
on
January 19, 2016
Rating:
No comments:
Post a Comment