மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரிடம் ஆசி பெற்றார் அமைச்சர் றிசாட் பதியுதீன் .....

மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஓய்வு பெற்ற ஆயர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளையிடம் அமைச்சர் றிசாட் பதியுதீன் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
இந்த சந்திப்பு இன்று 19-01-2016 இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, சிரேஷ்ட பத்திரிகையாளர் மு.வு.ராஜசிங்கம் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இதன் போது அமைச்சர் றிசாட் பதியுதீன் மன்னார் மாவட்டத்துக்கு ஆற்றி வரும் பணிகள் மேலும் தொடர வேண்டும் என மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் தெரிவித்துள்ளதோடு, இந்த மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை இன்னும் தீவிரம் காட்டி தீர்த்துவைக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் மன்னாரில் உட்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் வைத்தியசாலை குறைபாடுகளை தீர்த்து வைப்பதற்கு அமைச்சர் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயருடனான சந்திப்பில் கலந்து கொண்ட முக்கியஸ்தர்கள், மன்னாரின் குறைபாடுகள் தொடர்பில் விடுத்த கோரிக்கைகளை அமைச்சர் ஏற்றுக்கொண்டு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.
இதன் போது, இறுதியாக அப்போஸ்தலிக்க பரிபாலகர் அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் தனது வாழ்த்துக்களையும், ஜெபங்களையும் தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகரிடம் ஆசி பெற்றார் அமைச்சர் றிசாட் பதியுதீன் .....
Reviewed by Author
on
January 19, 2016
Rating:
Reviewed by Author
on
January 19, 2016
Rating:


No comments:
Post a Comment