தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இராமேஸ்வர மீனவர்களும் கடல் தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு (படம்)
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் நேற்று(10) புதன் கிழமை இரவு கடற்படையினரினால் கைது செய்யப்பட்டு தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட 12 இராமேஸ்வரத்து மீனவர்களும் இன்று(11) வியாழக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இரண்டு இழுவைப்படகுகளில் நேற்று(10) புதன் கிழமை இரவு மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த இரு படகுகளும் இலங்கை கடல் எல்லையினுள் நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடல் றோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட கடற்பi;டயினர் குறித்த இரு படகுகளிலும் இருந்த 12 இராமேஸ்வரத்து மீனவர்களையும் கைது செய்த நிலையில் தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர்.
-தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொண்ட நிலையில் இன்று வியாழக்கிழமை மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்த நிலையில் குறித்த அதிகாரிகள் மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு குறித்த மீனவர்களை அழைத்து வந்தனர்.
குறித்த இராமேஸ்வரத்து மீனவர்கள் 12 பேரையும் பார்வையிடுவதற்காக இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும் வருகை தந்தனர்.
-குறித்த மீனவர்கள் மேலதிக விசாரனைகளின் பின் இன்று மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவுள்ளதாக மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
-இராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமர் இசைக்கி முத்து(வயது-32), ராமதேவர் மூர்த்தி(வயது-28),ஆரோக்கியம் பிறைற்றன்(வயது-26),முருகேசன் மணிகன்டன்(வயது-28),முனிசாமி ராம்கி(வயது-24),யேசு அருளானந்தம் வெல்சன்(வயது-28),செபமாலை ஸ்ராலின்(வயது-30),அரசப்ப தேவர் கருப்புசாமி(வயது-57), செந்தில் அந்தோனி சாமி(வயது-45),தங்கராஜ் பால்ராஜ்(வயது-49), சுப்பிரமணி சுயம்பு(வயது-51), சௌந்தர் ராஜ் சந்தோஸ்(வயது-29) ஆகிய 12 இராமேஸ்வர மீனவர்களுமே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(மன்னார் நிருபர்)
(11-2-2016)
தலைமன்னார் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 12 இராமேஸ்வர மீனவர்களும் கடல் தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைப்பு (படம்)
Reviewed by NEWMANNAR
on
February 11, 2016
Rating:

No comments:
Post a Comment