மலேசியாவில் 924 நாக உருவங்களுடன் நாகேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...
கோலாலம்பூர்: மலேசியா பூச்சோங் கேட்வே, ஜலான் ஸ்ரீ கேம்பான்கான் பகுதில் உள்ள ஸ்ரீ மஹா ஆதி நாகேஸ்வரி அம்மன் ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல ஆயிரம் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர் அம்மன் அருள் பெற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோயில் தலைவர் எம்.சிவனேஸ்வரன், தர்மகர்த்தா க. ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்தியாவிலிருந்து, 50க்கும் மேற்பட்ட கட்டட கலைஞர்கள், 4 ஆண்டுகளாக பணியாற்றி இந்த கோயிலைக் கட்டி முடித்துள்ளனர். விகரகங்களுக்கு பூசப்பட்டுள்ள தங்க நிற பெயின்ட் தாய்லாந்திலிருந்து வரவழைக்கப்பட்டது. இந்த கோயில் ஆயிரத்து 200 சதுர அடி பரப்பில் அமைந்துள்ளது.
மிக பிரமாண்ட நாகேஸ்வரி அம்மன், 65அடி உயரசிவலிங்கம், ஏழு தலை அம்மனுக்கு குடை போன்ற தோற்றம் கொண்ட ஏழு நாக தூண்கள், எங்கு நோக்கினும் தங்க நிற வர்ணங்கள், 924 நாக வடிவங்கள், பிரமாண்ட நடராஜர் மற்றும் பல்வேறு சிற்பங்கள் பார்க்கவே தனி சிறப்புடன் பிரமிக்க வைக்கின்றன.
இந்த கோயிலில் கலாச்சார, சமூக, விழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளுக்கான அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் 924 நாக உருவங்களுடன் நாகேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்...
Reviewed by Author
on
February 20, 2016
Rating:
Reviewed by Author
on
February 20, 2016
Rating:





No comments:
Post a Comment