பாப்பரசர் கியூபா, மெக்ஸிக்கோ விஜயம்....
பாப்பரசர் பிரான்சிஸ் கியூபாவுக்கான பயணத்தை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளார்.
அவர் கியூப ஹவானா நகரிலுள்ள ஜோஸ் மார்ரி விமான நிலையத்தில் ரஷ்ய ஆர்த்தடொக்ஸ் திருச்சபையைச் சேர்ந்த தலைவர் கிறில் லைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
மேற்படி இரு திருச்சபையைச் சேர்ந்த தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவது 1054 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்போது பாப்பரசர் பிரான்சிஸும் கிறிலும் இணைந்து பிரகடனமொன்றை செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கியூபாவிற்கான இந்த விஜயத்தையடுத்து பாப்பரசர் பிரான் சிஸ் மெக்ஸிக்கோவுக்கு விஜ யம் செய்யவுள்ளார்.
அவர் விமான நிலையத்திலிருந்து வத்திக்கான் தூதுவரின் வசிப்பிடம் வரையான 19 கிலோமீற்றர் தூரத்திற்கு ஊர் வலமாகச் செல்லவுள்ளதாக தெரி விக்கப்படுகிறது.
பாப்பரசர் கியூபா, மெக்ஸிக்கோ விஜயம்....
Reviewed by Author
on
February 13, 2016
Rating:

No comments:
Post a Comment