கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவான்கொட்டிக் கிராமத்தை தத்தெடுத்துள்ளார் அமைச்சர் டெனிஸ்வரன்…

இதே சந்தர்ப்பத்தில் ஏற்க்கனவே மன்னார் மாவட்டத்தின் தேவன்பிட்டி கிராமத்தை தத்தெடுத்து அந்தக் கிராமத்தின் வளர்ச்சியில் மிகவும் சிரத்தையோடு செயற்ப்பட்டு அங்குள்ள மக்களின் வாழ்வாதாரம், போக்குவரத்து, கல்வி ஆகியவற்றை முடிந்தளவு சிறப்பாக அமைத்துக்கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது,
எனவே அந்த வகையில் தட்டுவன்கொட்டிக் கிராமத்தை தத்தெடுத்துள்ள அவர் அந்த கிராமத்துக்கு உடனடித் தேவையாக இருக்கும் பிரதான வீதியை புனரமைக்க 2 மில்லியன் ரூபாவும், வடக்கின் கிராமங்களுக்கான வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆயிரம் பாலங்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ் 3 பாலங்களையும் அமைக்கவுள்ளதாகவும், அத்தோடு பாடசாலையின் அபிவிருத்திக்கு ரூபா 50,000-00 மற்றும் மீனவர் சங்கத்துக்கு ரூபா 50,000-00 உம் வழங்குவதாகவும், அத்தோடு இங்கு கற்ப்பிக்கும் ஆசிரியர்கள் தினமும் முச்சக்கரவண்டிக்கு பெருமளவு பணம் செலுத்தியே பிரதான வீதியில் இருந்து பாடசாலைக்கு வந்து செல்வதால் அவர்களதும், கிராம மக்களதும் நலனையும் கருதி வீதி புனரமைப்பு நிறைவடைந்ததும் கிராமத்துக்கான உள்ளூர் பேரூந்து சேவையையும் விரைவாக வழங்கவுள்ளதாகவும் தெரிவித்ததோடு, அந்தக் கிராமத்தின் பழைய வராலாற்றை தாம் கேள்விப்பட்டதாகவும் முன்னைய வெள்ளைக்காரரின் ஆட்சிக்காலத்தில் இங்கு பெருமளவான மக்கள் வசித்ததாகவும் அந்தக்காலத்திலே இங்கு ஏற்ப்பட்ட வயிற்றோட்ட நோயினால் பலர் இறந்தமையாலேயே கிராமத்தை விட்டு மக்கள் வெளியேறியதாகவும் தெரிவித்தார்
இவ்வாறு பழமையான வரலாறுள்ள இந்த தட்டுவன்கொட்டி கிராமத்தை தாம் தத்தெடுப்பதன் வாயிலாக மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள இந்தக் கிராமம் எதிர்காலத்தில் மிகவும் ஓர் முன்னேற்றமான கிராமமாக மாறுவது கிராம மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது என்றும், மாறுவதற்கு தாம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு வடக்கு மாகாணத்தின் ஒவ்வொரு கிராமத்தையும் அபிவிருத்தியில் இட்டுச் செல்ல முயற்சி எடுக்கும் ஒவ்வொருவரையும் தாம் பாராட்ட வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் அந்த வகையில் இந்த வீதியை புனரமைக்குமாறு தம்மிடம் கோரிக்கை விடுத்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் அவர்களை இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
நிகழ்விற்கு வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் அரியரத்தினம் பசுபதி அவர்கள் சிறப்புவிருந்தினராகவும், திரு.கோ.சேகர் நிர்வாக கிராம அலுவலகர் கண்டாவளை பிரதேச செயலகம் அவர்கள் கௌரவ விருந்தினராகவும் கலந்துகொண்டனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் தட்டுவான்கொட்டிக் கிராமத்தை தத்தெடுத்துள்ளார் அமைச்சர் டெனிஸ்வரன்…
Reviewed by Author
on
February 20, 2016
Rating:

No comments:
Post a Comment