ஹரிஸ்ணவியை கொலை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்-மன்னார் மாவட்ட பொதுஅமைப்புக்களின் ஒன்றியம்.(photo,letter)
பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படு கொலைக்க காரணமாக இருந்தவர்களை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
-இச்சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,
-14 அகவையுடைய பள்ளி மாணவியாகிய பச்சிளம் சிறுமியை காம வெறிக்குற்படுத்தி கொடுரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
-நல்லாட்சி என்று சொல்கின்ற இன்றைய ஆட்சியாளர்கள் சட்ட நிர்ணய கட்டமைப்பை சறியாக பயண் படுத்துகின்றார்களா எனும் கேள்வி எழுகின்றது.
-இதே போல் தான் புங்குடுதீவு மானவி வித்தியாவின் படுகொலையிலும் விசேட நீதிமன்றம் அமைக்கப்படும் என்று சொன்னார் ஜனாதிபதி.ஆனால் ஓராண்டு வருகின்ற போதும் சந்தேக நபர்கள் மீது குற்றப்பத்திரம் கூட தாக்கல் செய்யாது வேடிக்கையான நீதிப்பரிபாலனமாகவே நாம் நோக்குகின்றோம்.
-இவ்வாறான செயல்கள் சனநாயக கட்டமைப்பின் நம்பகத்தன்மையை வலுவிழக்கச் செய்துவிடும்.எனவே வழமை போன்ற பொலிஸாரின் விசாரனைக்கு அப்பால் பொலிஸ்மா அதிபர் இவ் வழக்கில் தலையிட்டு உடனடியாக குற்றவாழியை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்துவதுடன் அவர்களுக்கு தகுந்த தண்டனையும் கிடைப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.
-இவ்வாறாண காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதுடன் யுத்தத்திற்கு பின்னரான இவ்வாறான மீலேச்சத்தனமான செயற்பாடுகள் அருவருக்கத்தக்கன.எனவே பிள்ளையை இழந்து தவிக்கும் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹரிஸ்ணவியை கொலை செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்-மன்னார் மாவட்ட பொதுஅமைப்புக்களின் ஒன்றியம்.(photo,letter)
Reviewed by NEWMANNAR
on
February 21, 2016
Rating:

No comments:
Post a Comment