இங்கிலாந்து விமான எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய போர் விமானங்கள் தடுப்பு
ஆர்.ஏ.எஃப் ஜெட் விமானம் இடைமறித்த சம்பவம் மீண்டும் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக இந்த ஜெட் விமானங்கள் இங்கிலாந்தின் கிழக்கு பகுதியில் உள்ள லின்கோல்ஷிர் நாட்டின் கோனிங்ஸ்பை ராயல் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த நவம்பர் மாதம் அட்லாண்டிக் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானங்கள் தைபூன் ஜெட் விமானங்களால் இடைமறிக்கப்பட்டது.
இங்கிலாந்து எல்லைக்குள் பறக்க முயன்றதாக கடந்த 12 மாதங்களில் மட்டும் ரஷ்ய போர் விமானங்கள் இதுவரை 6 முறை இடைமறிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காகவே போர் விமானங்கள் சுற்றி வந்ததாகவும், இங்கிலாந்து எல்லைப் பகுதிக்குள் நுழையவில்லை என்று செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இங்கிலாந்து விமான எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற ரஷ்ய போர் விமானங்கள் தடுப்பு
Reviewed by NEWMANNAR
on
February 18, 2016
Rating:

No comments:
Post a Comment