அண்மைய செய்திகள்

recent
-

மனிதகுல வரலாற்றையே பதிவு செய்யும் குறுந்தகடு: 1,380 கோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும்


பிரிட்டன் விஞ்ஞானிகள் 360 டெராபைட் மின்னணுத் தகவல்களை உள்ளடக்கக்கூடியதும் 1380 கோடி ஆண்டுகளுக்கு மேல் நிலைத்திருக்கக்கூடியதுமான ஐந்து பரிமாண குறுந்தகடு (5D data storage) ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த செளதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கண்ணாடி மின்னணுவியல் ஆய்வு மையம் இந்த குறுந்தகட்டை உருவாக்கியுள்ளது.

நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு சிறிய நாணயத்தின் அளவில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்து பரிமாணப் பதிவு முறை மூலம் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த குறுந்தகட்டில் தகவல்களைப் பதிவு செய்யவும் பதிவிட்டவற்றை மீளப்பெறவும் முடியும்.

இதன் நவீன தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு தகவல் புள்ளியும் 5 மைக்ரோமீட்டர் (ஒரு மீட்டரின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதி) இடைவெளியில் அமைந்துள்ளதால், மிகச் சிறிய இடத்திலேயே அதிக தகவல்களைப் பதிவு செய்ய முடிகிறது.

1,000 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை இந்தக் குறுந்தகடு தாக்குப் பிடிக்கும் என்பது இதன் மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

190 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் கூட இந்தக் குறுந்தகடு 1,380 கோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும்.

சாதாரண வெப்ப நிலையில் இந்தக் குறுந்தகடுகள் எல்லையற்ற வாழ்நாளைக் கொண்டிருக்கும்.

இத்தகைய சிறப்பு மிக்க இந்தக் குறுந்தகடுகளுக்கு, “சுப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்ஸ்’ (Superman memory crystal) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் பதிவு செய்யப்பட்ட தகவல் பல கோடி ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கும் என்பதால், வரலாற்று ஆவணங்களைப் பாதுகாக்கும் துறையினருக்கு இந்த குறுந்தகடுகள் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறப்படுகிறது.
மனிதகுல வரலாற்றையே பதிவு செய்யும் குறுந்தகடு: 1,380 கோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும் Reviewed by NEWMANNAR on February 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.