தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த பிரித்தானிய, பாலஸ்தீன உயர் மட்ட அதிகாரிகள்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இங்கிலாந்தின் அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிதிகள் அடங்கிய குழுவினருக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தின் தொழிலாளர் கட்சியைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பாபியன் ஹமில்டன் தலைமையிலான குழுவின்ரே இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும், மாவை சேனாதிராஜா ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் மற்றுமொறு சந்திப்பும் இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பபு நாடாளுமன்றக் கட்டடத்தொகுதில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்த பிரித்தானிய, பாலஸ்தீன உயர் மட்ட அதிகாரிகள்!
 
        Reviewed by Author
        on 
        
February 25, 2016
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
February 25, 2016
 
        Rating: 






No comments:
Post a Comment