மன்னார் - பள்ளிமுனை மக்களுடன் சுவீஸ் நாட்டு பிரதிநிதி சந்திப்பு....
மன்னார் - பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களுக்கும் சுவீஸ் நாட்டின் பிரதி நிதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணி அளவில் மன்னார் பள்ளிமுனை பொது மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
கடந்த 3 வாரங்களுக்கு முன் சுவீஸ் நாட்டின் மனித உரிமை செயற்பாட்டாளருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, பள்ளிமுனை மக்களின் சந்திப்பு பற்றி தெளிவு படுத்தியமைக்கு அமைவாக இலங்கைக்கு வந்து தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்துடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும், இந்த அபிவிருத்தியின் மூலமாக மக்களின் வாழ்கை நிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதனையும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்பிட்டி ஆகிய மாவட்டங்களுக்கு சென்று பார்வையிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று மன்னாரிற்கு வருகை தந்த சுவீஸ் நாட்டின் பிரதிநிதி மன்னாரில் இடம் பெயர்ந்து மீள் குடியேற்றப்படாமல் இருக்கும் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதே வேளை கடந்த 25 வருட காலமாக பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள் தங்களின் சொந்த காணிகளில் குடியேற முடியாத நிலையில் காணப்படுகின்றனர்.
இந்த மக்களின் காணிகளில் தற்போது கடற்படை குடி கொண்டுள்ளதுடன் மக்கள் அனைவரும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் வசித்துவ ருகின்றார்கள்.
மக்கள் பல போராட்டங்களை நடாத்தி இருக்கின்றார்கள், பல மகஜர்கள் கையளித்திருக்கின்றார்கள் ஆனாலும் இன்று வரை எந்த வித பலனும் கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
சொந்த இடங்களுக்கு பதிலாக வாடகைப்பணம் தருவதாகவும் குறித்த இடங்களை கடற்படையினரின் தேவைகளுக்கு தரும்படியும் கடற்படையினர் மக்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தற்பொழுது நீதி மன்றத்தில் குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பான வழக்கு விசாரணைகளும் இடம்பெறுவதால், மக்கள் தொடர்ந்தும் தங்களின் பூர்வீக காணியில் குடியேற ஆவலாக உள்ளதாகவும், அந்த நாள் எப்போது மலரும் எனவும் மக்கள் எதிர்ப்பார்த்துக்கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த கலந்துரையாடலில் சுவீஸ் நாட்டின் பிரதி நிதி மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டதோடு பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் - பள்ளிமுனை மக்களுடன் சுவீஸ் நாட்டு பிரதிநிதி சந்திப்பு....
Reviewed by Author
on
February 06, 2016
Rating:
Reviewed by Author
on
February 06, 2016
Rating:



No comments:
Post a Comment