தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்துகொண்ட சிறுமி....
ஐ.எஸ். தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்து சிறுமியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகள் உலகம் முழுவதும் பல்வேறு நாச செயல்களில் ஈடுபட்டுவருவதுடன் தங்களிடம் உள்ள பணைய கைதிகளையும் மோசமாக நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ஈராக்கின் வடக்கு பகுதியில் வசித்துவரும் யாஸிதி இனத்தை சேர்ந்த ஆண்களை கொன்றும் அவ்வின பெண்களை தங்களின் பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
சில காலம் சென்றவுடன் அந்த பெண்களை வேறு ஒருவருக்கு விற்று விடுகின்றனர். இந்த வகையில் சிறுமிகள் முதல் ஏராளமான பெண்கள் அவர்களிடம் அடிமைகளாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 1,100 பெண்கள் மற்றும் சிறுமிகள் மீட்கப்பட்டு ஜேர்மனியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர் ஜான் லான் கிசிலான் என்பவர் இதுகுறித்து கூறியதாவது, ஐ.எஸ். அமைப்பினரிடம் சிக்கி நிறைய பெண்களின் வாழ்க்கை சீரழிந்துள்ளது.
8 வயது சிறுமி ஒருவர் பல முறை கற்பழிக்கப்பட்டு பின்னர் விற்கப்பட்டிருக்கிறாள்.
அதுபோல் ஐ.எஸ். பிடியில் இருந்த சிறுமி ஒருவர் தனது கற்பை காப்பாற்றிக்கொள்வதற்காக தனது உடல் மற்றும் முகத்தில் தீவைத்து கொண்டுள்ளார்.
இதனால் தீவிரவாதிகள் தன்னை விட்டுவிடுவார்கள் என அவர் நினைத்துள்ளார்.
அவர் 80 சதவீத தீக்காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது போல் பல பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளிடமிருந்து கற்பை காப்பாற்றுவதற்காக தனக்கு தானே தீ வைத்துகொண்ட சிறுமி....
Reviewed by Author
on
February 29, 2016
Rating:

No comments:
Post a Comment