போதையால் உச்சகட்ட கோபம்: சக தோழியின் கன்னத்தை கடித்து சதையை தனியாக எடுத்த பெண்!
இங்கிலாந்தில் தனது தோழிகளுடன் மது விருந்திற்கு சென்ற பெண்ணின் கன்னத்தை அவருடன் பணியாற்றும் பெண்மணி ஒருவர் கடித்து எடுத்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த Kate Nield என்பவர் Southport நகரில் உள்ள தனது தோழியின் வீட்டில் நடைபெற்ற மது விருந்திற்கு சென்றுள்ளார்.
அந்த விருந்தில் ஒன்று சேர்ந்து கலந்துகொண்ட தோழிகள் அனைவரும் நன்றாக குடித்து அந்த விருந்தினை உற்சாகமாக கொண்டியுள்ளனர், அதில் ஒரு பெண் அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு உச்சகட்ட கோபத்திற்கு சென்றுள்ளார்.
இதன் விளைவாக, Kate - யின் கன்னத்தினை கடித்ததில், சதை தனியாக வந்துள்ளது, இதனால் Whiston மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Kate- யினை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கையில் இருந்து சிறுதுண்டு சதையை வெட்டி எடுத்து அவரது கன்னத்தில் வைத்து சிகிச்சை செய்துள்ளனர்.
இருப்பினும் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.
இது திட்டமிட்ட தாக்குதல் என Kate பொலிசில் புகார் தெரிவித்துள்ளார், இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் பொலிசார் அப்பெண்ணை தற்போது வரை கைது செய்யவில்லை.
மேற்கொண்டு விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.
போதையால் உச்சகட்ட கோபம்: சக தோழியின் கன்னத்தை கடித்து சதையை தனியாக எடுத்த பெண்!
Reviewed by Author
on
February 29, 2016
Rating:

No comments:
Post a Comment