எரிபொருள் நிலையம்தான் பிரச்சினையா? அம்பலமாகும் உண்மைகள்!
தனது நெடுங்கேணி எரிபொருள் நிலையத்தை வடமாகாணசபை பொறுப்பேற்க மறுத்ததையடுத்தே வவுனியா மாவட்ட வடமாகாணசபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் தனது குரலை ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளார். தனது நெடுங்கேணியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை அமைச்சர் ஜங்கரநேசனின் கூட்டுறவுத்துறையின் கீழ் பொறுப்பேற்கவும் தனக்கு மாதம் பெருந்தொகை வருமனாத்தை தரவும் கோரியமை அம்பலமாகியிருந்தது.
எனினும் ஆய்வுகளில் குறித்த எரிபொருள் நிலையம் பெரும் நட்டத்தில் இயங்கியதையடுத்து கூட்டுறவுத்துறையிடம் அதனை கையேற்று ஒப்படைக்கும் முடிவை பொ.ஜங்கரநேசன் கைவிட்டுள்ளார்.
இதையடுத்தே தனது பங்காளியான அமைச்சர் பொ.ஜங்கரநேசனை இலக்கு வைத்து பிரச்சாரங்களை லிங்கநாதன் ஆரம்பித்திருந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் வவுனியாவில் ஊடகவியலாளர்களை நேற்று சந்தித்துள்ள ஜி.ரி.லிங்கநாதன் விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் குறிப்பாக வவுனியா மாவட்டத்தில் மூங்கில் செய்கை, மல்லிகைச்செய்கை என்பவற்றை தனியார் செய்ய முற்பட்டபோது அதனை தடுத்திருந்தார் என்பதனை சுட்டிக்காட்டியிருந்தேன். இந்த குற்றச்சாட்டை நான் முதலில் முன் வைத்தேன்.
அதன் பின்னர் உறுப்பினர்கள் குறித்த அமைச்சர் மீது இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தனர். ம.தியாகராசா, சுகிர்தன், ஆர்னோல்ட், அஸ்மின், சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், சஜந்தன் ஆகிய உறுப்பினர்களும் விவசாய அமைச்சரின் குறைபாடுகளை சுட்டிக்காட்டினார்கள்.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் குறிப்பிட்ட அமைச்சர் நல்லாட்சிக்கு விரோதமாக செயற்படுகின்றார் என்றும், கூட்டுப்பொறுப்போடு செயற்படாமல் இருக்கின்றார் என்றும் ஊழல்மோசடிகளோடு தொடர்புபட்டிருக்கின்றார் என்றும் மக்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் ஏமாற்றுகின்றார் என்றுமே அமைந்திருந்தன. இவற்றுக்கு முதலமைச்சர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.
மாகாண சபையின் ஆளும் தரப்பின் குழுக்களின் தலைவர் என்னும் அந்தஸ்த்தையும் அவர் இழந்துவிட்டார். விரைவில் உறுப்பினர்கள் ஒன்றுகூடி இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் ஒன்றினை முன்னெடுப்போம். இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்
எரிபொருள் நிலையம்தான் பிரச்சினையா? அம்பலமாகும் உண்மைகள்!
Reviewed by NEWMANNAR
on
February 13, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 13, 2016
Rating:


No comments:
Post a Comment