மாணவி ஹரிஸ்ணவி படு கொலையை கண்டித்து மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்(படம்)
இலங்கையின் சட்டத்துறையும், இல்கையின் காவல் துறையும் அதனுடன் இணைந்த ஏனைய சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள் எமது மக்களையும்,மாணவர்களையும், இளம் சிறார்களையும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா தெரிவித்துள்ளார்.
பாலியல் வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படு கொலையை கண்டித்து இன்று புதன் கிழமை (24) மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இ.கயஸ் பெல்டானோ தலைமையிலான சட்டத்தரணிகள் இன்று புதன் கிழமை தமது நீதிமன்ற செயற்பாடுகளை நிறுத்தி பாலியல் வன்புணர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட மாணவி ஹரிஸ்ணவியின் கொலையை கண்டித்துள்ளனர்.
இதனால் இன்றைய தினம் மன்னார் நீதிமன்றத்தில் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
இன்றை தினத்திற்கான சகல வழக்கு விசாரனைகளும் பிரிதொரு தினத்தில் இடம் பெறவுள்ளது.
மன்னார் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் இ.கயஸ் பெல்டானோ தலைமையில் இடம் பெற்று வரும் பணிப்பகிஸ்கரிப்பு தொடர்பாக சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் இன்று புதன் கிழமை ஒரு நாள் பணிப்பகி;கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதற்கு ஆதரவு தெரிவித்து மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாகவும் நாங்கள் இன்று ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றோம்.
வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவி காமுகர்களினாலும்,காடையர்களினாலும், மனிதாவிமானமற்ற முறையில் பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சமீப நாற்களாக வடக்கு மாகாணத்தின் தன்மையை நாங்கள் பார்க்கின்ற போது யுத்தத்தினாலே சீரழிந்து மிகவும் தமது வாழ்க்கை முறைகளை எமது மக்கள் படிப்படியாக முன்னேற்றி வருகின்றனர்.
தற்போது எமது மக்கள் யாருக்கு அஞ்சுவது என்று தெரியாது தமது பிள்ளைகளை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்று தெரியாது பாரிய நெருக்கடிக்குள்லே இருக்கின்றனர்.
கிருஸாந்தி,இசைப்பிரியா வரிசையிலே மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டார்.
அதன் வரிசையிலே 13 வயது மாணவி ஹரிஸ்ணவி மிகவும் கேவலமான முறையில் பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உற்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி துஸ்பிரையோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமையினை மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.
குறித்த நடவடிக்கைகளில் ஈடுபட்டது யாராக இருந்தாலும்,சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்பட்டு உச்ச கட்ட தண்டனை வழங்கப்பட வேண்டும்.
இலங்கையின் சட்டத்துறையும் , இல்கையின் காவல் துறையும் அதனுடன் இணைந்த ஏனைய சிவில் மற்றும் சமூக அமைப்புக்கள் எமது மக்களையும்,மாணவர்களையும், இளம் சிறார்களையும் பாதுகாக்கின்ற நடவடிக்கைகளில் முழு மூச்சாக ஈடுபட வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக கோரிக்கை விடுக்கின்றோம்.
எங்களுடைய பிள்ளைகளை எதிர்காலத்தில் நல்ல பிரஜைகலாக்குவதற்கு இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்ற நபர்களை தண்டித்து எமது இளம் சமூதாயத்தை எதிர்காலத்தில் நல்ல பிரஜைகலாக்குவதற்கு சமூகம் சார்பாகவும்,அமைப்புக்கள் சார்பாகவும் இணைந்து பாடுபடுவோம்.
-மிருகத்தனமான இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக சமூகத்தில் இருக்கின்ற பொது அமைப்புக்கள் இணைந்ததாக பொற்றோரும் விழிர்ப்புடன் இருந்து தமது பிள்ளைகள் போகின்ற இடம் வருகின்ற இடம் என்பவற்றை அறிந்து பிள்ளைகளுக்கு காவலாளியாக இருந்து தொடர்ந்து செயற்படுவதன் மூலமும் அவர்களை அக்கரையாக தமது கண்முன்னே வைத்து பாதுகாக்கின்ற போது எதிர்காலத்திலே இவ்வாறான நடவடிக்கைகள் எமது இளம் சமூகத்திற்கு நடக்காத வகையில் தவிர்த்துக்கொள்ள முடியும்.
எனவே வன்புணர்வின் பின் மிக மோசமான முறையில் படுகொலை செய்யப்பட்ட வவுனியா விபுலானந்த கல்லூரி மாணவி ஹரிஸ்ணவியின் படு கொலையை கண்டித்து வடக்கு மாகாண சட்டத்தரணிகள் சங்கத்துடனும், ஏனைய அமைப்புக்களுடனும் இணைந்து மன்னார் சட்டத்தரணிகள் சங்கம் சார்பாக நாங்களும் இச்சம்பவத்தை வன்மையாக கண்டித்து ஒரு நாள் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.என சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா மேலும் தெரிவித்தார்.
மாணவி ஹரிஸ்ணவி படு கொலையை கண்டித்து மன்னார் நீதிமன்ற சட்டத்தரணிகள் பணிப்பகிஸ்கரிப்பு-மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதம்(படம்)
Reviewed by NEWMANNAR
on
February 24, 2016
Rating:
No comments:
Post a Comment