அண்மைய செய்திகள்

recent
-

பாலியல் துன்­பு­றுத்­தலில் பாது­காக்கும் ஷாக்கிங் கிளவுஸ்....


பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை ராஜஸ்தான் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

பெண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடும் ஆண்களிடம் இருந்து தப்பிக்க 'ஷாக்கிங் கிளவுஸ்' என்ற இவர் புதிய கருவியை ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டம் அகோர் அரசு பாடசாலையில் 12ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நிரஞ்சன் சுதார் என்ற 17 வயதான மாணவனே இக் கருவியை கண்டுப்பிடித்துள்ளார்.

கலைத்துறை பாடம் எடுத்துள்ள நிரஞ்சன் சுதார் மின்கருவியை கையாள்வதிலும் மின்னியல் பொருட்களை தயாரிப்பதிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

டில்லியில் இடம்பெற்ற மாணவி நிர்பயா கொலை சம்பவம் நிரஞ்சன் மனதை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் காம கொடூரர்களிடம் இருந்து பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள புதிய கருவியை கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.

அவரது 2 ஆண்டு ஆராய்ச்சியில் உருவானது தான் 'ஷாக்கிங் கிளவுஸ்' 150 கிராம் எடையில் கையுறை போன்ற வடிவமைக்கப்பட்ட இதனுள் சிம்கார்டு, சி.சி.டி. கேமிரா மற்றும் 3.4 வால்ட் மின்சக்தி கொண்ட பேட்டரி போன்றவை பொருத்தப் பட்டு உள்ளது.இதனை தயாரிக்க ஆகும் செலவு 500 ரூபாவாகும்.

தனியாக செல்லும் பெண்கள் இந்த கையுறையை அணிந்து கொண்டால் போதும். ஆண்கள் யாராவது அவர்களிடம் வம்பு செய்து தொட்டால் ஷாக்கிங் கிளவுசில் உள்ள 3.4 வால்ட் மின்சாரம் 220 வால்ட் மின்சார சக்தியாக மாறி அவனை வீழ்த்திவிடும்.இதில் ஜி.பி.எஸ். கருவியும் பொருத்தபட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு எஸ்.எம்.எஸ் சென்று விடும். அத்தோடு அதில் உள்ள கெமிரா குறித்த ஆண்களை படம்பிடிக்கும். ஷொக்கிங் கிளவுசை பரிசோதித்து பார்த்த பலர் மாணவனை பாராட்டியுள்ளார்கள்.

டில்லியில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய அறிவியல் கண்காட்சியில் நிரஞ்சன் இக்கருவியை பார்வை படுத்தவுள்ளார். டில்லியைச் சேர்ந்த மின்னணு நிறுவனம் ஒன்று மாணவனின் ஆராய்ச்சி சாதனத்தின் மாதிரியை கேட்டு உள்ளது அதனை நுகர்வோருக்கு பயன்படும் வகையில் மாற்ற அது முடிவு செய்து உள்ளது.

பாலியல் துன்­பு­றுத்­தலில் பாது­காக்கும் ஷாக்கிங் கிளவுஸ்.... Reviewed by Author on February 24, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.