ஒபாமாவின் ப்ளாக்பெரி...!
உலகின் பாதுகாப்பான மனிதர்களில் ஒருவரான அமெரிக்க அதிபர் ஒபாமா பயன்படுத்தும் மொபைல் போன் பற்றி தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். பலக்கட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் மொபைல் எந்தளவு பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
ப்ளாக்பெரி
மற்றவர்கள் ப்ளாக்பெரி பயன்படுத்தி இன்று மற்ற கருவிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். ஆனால், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்றும் ப்ளாக்பெரியை பயன்படுத்தி வருகின்றார்.
தேசிய பாதுகாப்பு மையம்
ஒபாமா பயன்படுத்தும் ப்ளாக்பெரி கருவியானது அதிக பாதுகாப்பு அம்சங்களை கொண்டு, தேசிய பாதுகாப்பு மையம் உருவாக்கியதாகும்.
செக்யூர் வாய்ஸ்
தேசிய பாதுகாப்பு மையம் உருவாக்கிய கருவியை ப்ளாக்பெரி நிறுவனம் பிரத்யேக பாதுகாப்பு மென்பொருளான செக்யூர்வாய்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
குறுந்தகவல்
எவ்வித சூழ்நிலையிலும் யாராலும் ஹேக் செய்ய முடியாத அளவு வடிவமைக்கப்பட்டுள்ள ப்ளாக்பெரி கருவியில் கேம், செல்பீ கேமரா மற்றும் குறுந்தகவல் உள்ளிட்ட அம்சங்கள் கிடையாது.
என்க்ரிப்ஷன்
பாதுகாப்பு காரணங்களுக்காக அடிப்படை அம்சங்கள் வழங்கப்படவில்லை என்றாலும், உலக தரம் வாய்ந்த என்க்ரிப்ஷன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எண்ணிக்கை
ஒபாமாவின் ப்ளாக்பெரி கொண்டு அதிகபட்சம் 10 பேரிடம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும். இதில் துணை அதிபர் ஜோ பிடென், ஒபாமாவின் தலைமை அதிகாரி மற்றும் அவரது தனிப்பட்ட ஆலோசகர்கள் அவரது மனைவி மிட்செல் ஒபாமா மற்றும் ஒரு சில குடும்ப உறுப்பினர்கள் அடங்குவர்.
இணைப்பு
ஒபாமாவின் ப்ளாக்பெரி கருவியானது குறிப்பிட்ட பாதுகாப்பான கட்டுப்பாட்டு கருவியுடன் மட்டுமே இணைக்கப்பட முடியும். இது ஐ.எம்.ஈ.ஐ நம்பர்களை முடக்க பயன்படுத்தப்படுகின்றது. இதனால் யாரும் கருவியை ஹேக் செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பயணம்
இதனால் ஒபாமா எங்கு சென்றாலும் அவருடன் இந்த கருவியும் கொண்டு செல்ல வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கட்டுப்பாட்டு கருவி
இந்த கட்டுப்பாட்டு கருவி அதிபரின் வீடு மற்றும் அவர் பயணம் செய்யும் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலும் வைக்கப்பட்டுள்ளது. இது அதிகம் பாதுக்காப்பானதாகும்.
ஒபாமாவின் ப்ளாக்பெரி...!
Reviewed by Author
on
February 18, 2016
Rating:
Reviewed by Author
on
February 18, 2016
Rating:


No comments:
Post a Comment