வித்தியா படுகொலை வழக்கு: குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மீது சீறிய நீதிபதி
புங்குடு தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் கடுமையாக உத்தவிட்டார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மரபணு சோதனை அறிக்கை உட்பட எந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நீதிமன்றில் அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாததால், விசாரணைகளை மேற்கொள்ள முடியாது வழக்குத் தவணைகள் தள்ளிப் போய்க் கொண்டு இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலை தொடருமாயின் மக்கள் நீதிமன்றின் மீது அதிருப்தி கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் இதுவரை இந்த வழக்கு தொடர்பில் குற்றபுலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை அடுத்த தவணையில் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என நீதிபதி கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் பணிப்புரைவிடுத்தார்.
இந்த வழக்கு விசாரணையின் போது குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் கடுமையாக உத்தவிட்டார்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் மரபணு சோதனை அறிக்கை உட்பட எந்த அறிக்கையும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை.
நீதிமன்றில் அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாததால், விசாரணைகளை மேற்கொள்ள முடியாது வழக்குத் தவணைகள் தள்ளிப் போய்க் கொண்டு இருப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இந்த நிலை தொடருமாயின் மக்கள் நீதிமன்றின் மீது அதிருப்தி கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் இதுவரை இந்த வழக்கு தொடர்பில் குற்றபுலனாய்வு துறையினர் மேற்கொண்ட விசாரணைகள் தொடர்பிலான அறிக்கைகளை அடுத்த தவணையில் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என நீதிபதி கடுமையாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்நிலையில் சந்தேக நபர்களை எதிர்வரும் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் பணிப்புரைவிடுத்தார்.
வித்தியா படுகொலை வழக்கு: குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மீது சீறிய நீதிபதி
Reviewed by NEWMANNAR
on
February 19, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 19, 2016
Rating:

No comments:
Post a Comment