திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற " அம்மை அப்பன் அருட்பாமாலை " கைநூலும் இறுவட்டும் வெளியீட்டு விழா-Photos
திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற " அம்மை அப்பன் அருட்பாமாலை " கைநூலும் இறுவட்டும் வெளியீட்டு விழாவில் மன்னார் பிரதேச செயலாளர் திரு.கே.எஸ்.வசந்தகுமார் அவர்கள் பிரதமவிருந்தினராகவும், வடமாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் திரு.தி.விஸ்வரூபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர்.
சிவன்அருள் இல்ல அறங்காவலர்சபை உறுப்பினரான Dr.ஜெயமோகன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், இப்பாமாலையை உருவாக்கிய கவிஞர்.வேலணையூர் சுரேஸ், இசைவடிவம் கொடுத்த திரு.கோ.சத்தியன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இப் பாடல்களைத் தன்இனிய குரலினால் பாடியுள்ள பாடகி செல்வி.வ.வைஷ்ணவி ( சுவிஸ்) பாராட்டப்பட்டார்.
அகர வரிசையில் ஈரடி வெண்பா வடிவில் அமைந்துள்ள இப்பாடல்கள் ,மிக இனிமையாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளதால் இம்முயற்சி , நிச்சயமாக சைவத் தமிழ் உலகின் பெருவரவேற்பைப் பெறும் என நம்பலாம்.
பிரதிகளைப் பெறவிரும்பும் ஆர்வலர்கள் சிவன்அருள் இல்லத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
சிவன்அருள் இல்ல அறங்காவலர்சபை உறுப்பினரான Dr.ஜெயமோகன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில், இப்பாமாலையை உருவாக்கிய கவிஞர்.வேலணையூர் சுரேஸ், இசைவடிவம் கொடுத்த திரு.கோ.சத்தியன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
இப் பாடல்களைத் தன்இனிய குரலினால் பாடியுள்ள பாடகி செல்வி.வ.வைஷ்ணவி ( சுவிஸ்) பாராட்டப்பட்டார்.
அகர வரிசையில் ஈரடி வெண்பா வடிவில் அமைந்துள்ள இப்பாடல்கள் ,மிக இனிமையாகவும் சிறப்பாகவும் உருவாக்கப்பட்டுள்ளதால் இம்முயற்சி , நிச்சயமாக சைவத் தமிழ் உலகின் பெருவரவேற்பைப் பெறும் என நம்பலாம்.
பிரதிகளைப் பெறவிரும்பும் ஆர்வலர்கள் சிவன்அருள் இல்லத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
திருக்கேதீச்சரம் சிவன்அருள் இல்லத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற " அம்மை அப்பன் அருட்பாமாலை " கைநூலும் இறுவட்டும் வெளியீட்டு விழா-Photos
Reviewed by NEWMANNAR
on
February 21, 2016
Rating:

No comments:
Post a Comment