அண்மைய செய்திகள்

recent
-

மன்.முசலி தேசிய பாடசாலை மீதான ஒரு விமர்சனப்பார்வை(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

முசலிப்பிரதேசத்தில் இருக்கின்ற தாய்ப்பாடசாலை இதுவாகும்.இதன் முதல் அதிபர்.திரு.சுவாம்பிள்ளை அவர்கள்

ஆவார்.இப்பாடசாலை 1 தொடக்கம் 13 வரையான வகுப்புக்களைக்கொண்டிருந்தது;.கொத்தணி பாடசாலைத்திட்டம் அமுலில் இருந்த

போது இப்பாடசாலை கொத்தணிப் பாடசாலையாக இருந்தது.இப்பாடசாலைமூலம் பலர் பல்கலைக்கழகம் சென்றுள்ளனர்.அமைச்சின்

செயலாளர்கள்.பல்கலைக்கழக பதிவாளர்கள்,விரிவுரையாளர்கள்,தொழில் அதிபர்கள் .கல்விநிருவாக சேவை

உத்தியோகத்தர்கள் .அரச ஊழியர்கள் எனப்பட்டியல் போட்டுக்கொண்டு போகலாம்.ஓய்வு பெற்ற கல்வி நிருவாகசேவை

அதிகாரிகளான,சியான் சேர்,அசதுல்லா சேர்,மஹ்ரூப் மௌலவி போன்றோரும் இப்பாடசாலையில்

கல்விப்பணிபுரிந்த கனவான்கள்.இப்பாடசாலையில் அதிபராக இருந்த மர்ஹூம்.எ.சி.அப்துல் ஹக் சேர் அவர்கள் கல்வி

நிருவாக சேவையில் உயர்ந்து வடகிழக்கு மாகாண உதவிக்கல்விப் பணிப்பாளராகவும் சேவை புரிந்துள்ளார்.

1.திரு.சுவாம்பிள்ளை .யாழ்ப்பாணம்

2.திரு.சின்னத்தம்பி யாழ்ப்பாணம்

3.திரு.சரீப் எருக்கலம்பிட்டி

4.திரு.ஸலாம் .மன்னார் குடியிருப்பு

5.திரு.கபூர் .எருக்கலம்பிட்டி

6.திரு.சித்தீக் .தாராபுரம்

7.திரு.அமீர்.விடத்தல் தீவு

8.திரு.ஏ.சி.அப்துல்ஹக் .எருக்கலம்பிட்டி

9.திரு.முஸ்தபா எருக்கலம்பிட்டி

10.திரு.மு.அலி தாராபுரம்

11.திரு.இப்ராஹிம் பிரதி அதிபர் எருக்கலம்பிட்டி

12.திரு.வ.மு.அப்துஸ்ஸலாம் பிரதி அதிபர் முசலி

13.திரு.எஸ்.எம். குலாம் காதர் பதிலதிபர் அ.சிறுக்குளம்

             இப்பாடசாலையின் ஆசிரியர் எச்.எம்.சரீப் அவர்கள் முந்நாள் ஜனாதிபதி ஜெ.ஆர்.ஜெயவர்தனாவின்

மொழிபெயர்ப்பாளராக கடமைபுரிந்துள்ளார்.இதே போல இப்பாடசாலையின் இன்னொரு ஆசிரியர் அலிகான் ஷரீப்

முன்னாள் ஜனாதிபதி ஆர் பிரேமதாசவின் பேச்சாளராகவும்,மேல்மாகாண உடற்கல்வி அதிகாரியாகவும்

இருந்துள்ளார்.தற்போது கணியமணல் கூட்டுத்தாபன செயற்பாட்டுப்பணிப்பாளராகவும் பணிபுரிகிறார்.

           இப்பாடசாலை 2002ல் பல அசௌகரியங்களுக்கு மத்தியில் மீளத்திறக்கப்பட்டது.அதன் பதிலதிபராக கடமைபுரிந்த

குலாம் சேர் அவர்கட்கு பக்கபலமாக எம்.எம்.சக்கரியா சேர் செயற்பட்டார்.அக்காலப்பகுதியில் அடைவுமட்டத்தைவிட

பாடசாலை மீளத்திறக்கப்பட்டதே பெரிதாக இருந்தது.பின்னர் பாடசாலையின் அடைவுமட்டத்திலும்,நிருவாகத்திலும்

திருப்திகாணாத வலயக்கல்விப் பணிப்பாளர்.பொருத்தமான அதிபராக அ.சு.லாஹிர் பி.கொம். எஸ்.எல்.பி.எஸ்01

அவர்களை இனங்கணடு நியமிக்க முயன்றார் அதை கன்றுக்குட்டி அரசியல் தடுத்தது.அதன்பிற்பாடு அதிபர் கூட்டங்களுக்கு

செல்வதில்லை.

    புhடசாலையில் பட்டதாரி ஆசிரியர்கள் அகௌரவப்படுத்தப்பட்டனர்.அதனால் மனமுடைந்த பல்கலைக்கழகத்தில்

விசேடதுறையில் கற்ற புவியியல் ஆசிரியரும்,அரசியல் ஆசிரியரும் வெளியேறிவிட்டனர்.இப்பாடசாலையின்

கடந்தகால க.பொ.த.உ.த,சாதாதாரண தர,தரம்.05  பெறுபேறுகளை விஞ்ஞானரீதியாக பகுப்பாய்வு செய்;ததால் நிலைமை

புரியும்;..ஆரம்ப ஆசிரிய நியமனம் பெற்றோர் உயர்தரத்திற்கு கற்பிக்கின்றனர்.

அமைச்சர் றிசாத்பதியுதீன் இப்பிரதேச மீள்குடியேற்ற வேகத்தை கூட்டுவதற்காக முசலிப் பாடசாலையை

தேசியபாடசாலையாக்கி  பௌதீகவசதிகளையும் ,ஆளணிவசதிகளையும் செ;ய்து கொடுத்தார்.அதுமட்டுமன்றி  மேலதிக

வகுப்புக்கள் நிதியுதவி வழங்கினார்.ஆனால் கல்வி வெளியீடு கவலைப்படும் அளவில் உள்ளது.அமைச்சருக்கும் உண்மை நிலையை

முசலி ஜீனியஸ் விஞ்ஞானரீதியாக விளக்கியுள்ளனர்.

   நாம் எதிர்பார்த்தோம் புத்தளத்தில் இருந்து பெருந்தொகையான மாணவர்கள் இங்கு படையெடுப்;பர் என ; அப்படி

எதுவுமே நடக்கவில்லை..மாறாக உயர்கல்வி கற்க வெளியிடங்கட்கு இடம் பெயருகி;ன்றனர்..இப்பாடசாலையின் சரிவுக்கு

மன்னார் வலயக்கல்வி அலுவலகமும்,வடமாகாண  கல்வித்திணை;களமும் வகை சொல்ல வேண்டும்.  

       கல்வி அமைச்சு விஷேட புலனாய்வுக் குழுவை  அனுப்பி நிலைமைகளைப் பகுப்பாய்வு செய்து கல்வி நிருவாக  சேவையைச்

சேர்ந்த அதிபர்களையும்,அதிபர் சேவையைச் சேர்நந்த பிரதி அதிபர்களையும் நியமிக்குமாறு முசலி புத்திஜீவிகள்

கோரி;க்கைவிடுகின்றனர்.
மன்.முசலி தேசிய பாடசாலை மீதான ஒரு விமர்சனப்பார்வை(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்) Reviewed by NEWMANNAR on February 23, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.