அண்மைய செய்திகள்

recent
-

விடத்தலூர் சுற்றுக்கிண்ணத்தை நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது.

விடத்தல் தீவின் மைந்தனும் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபரும , பேசாலை பற்றிமா பாடசாலையின் இன்னாள் அதிபருமான டிலாசால் சபை அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் தனது பாடசாலைகளூடாக உதைபந்தாட்டத்தில் ஆர்வமான மாணவர்களை தேசிய அணியில் விளையாடுமளவிற்கு ஒழுக்க நெறியுடைய வீரர்களாக மாற்றியதன் மூலம் மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தார் என்பது யாவரும் அறிந்ததே,

 இவரது இச்சேவையை கெளரவிக்கும் முகமாக அவரின் அம்மண் மாணவர்களின் நிதியுதவியடன் மடு மாந்தைமேற்கு உதைபந்தாட்ட லீக்கினால் நடாத்தப்பட்ட விடத்தலூர் சுற்றுக்கிண்ணத்தின் இறுதிப்போட்டி 7/2/2016 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30மணியளவில் காத்தாங்குளம் விளையாட்டு மைதானத்தில் நடாத்தப்பட்து. இதில் நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக்கழகமும், ஆண்டாங்குளம் தோமையார் அணியினரும் மோதினர். அந்தோனியார் அணி 2 கோல்களை போட்ட வேளையிலும் தோமையார் அணியினரால் ஒரு கோலையும் போடமுடியவில்லை. ஆகையால் அந்தோனியார் அணியினர் 2 கோல்களால் முன்னிலை பெற்று விடத்தலூர் சுற்றுக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டனர்.

இவ்விறுதிப் போட்டிக்கு பிரதமவிருந்தினராக அருட்சகோதரர் ஸ்ரனிஸ்லோஸ் அவர்கள் வருகை தந்ததோடு அருட்சகோதரர்களான மனோரஞ்சிதன், வியதாஸ் அவர்களும், மாந்தைமேற்கு பிரதேச சபை முன்னாள் உபதலைவர், காத்தாங்குள கிராமசபைத்தலைவர், மற்றும் எமது லீக்கின் உறுப்பினர்கள் வருகை தந்ததோடு கிராமமக்களும் இப்போட்டியை கண்டுகழித்து சிறப்பித்தனர்.





விடத்தலூர் சுற்றுக்கிண்ணத்தை நெடுங்கண்டல் அந்தோனியார் விளையாட்டுக் கழகம் சுவீகரித்துக் கொண்டது. Reviewed by NEWMANNAR on February 08, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.