சுதந்திர தினமான இன்று திருமலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்
இலங்கையின் 68வது சுதந்திர தினமான இன்று திருகோணமலை மாவட்டத்திலுள்ள பாதிக்கப்பட்ட பல குழுக்கள் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
திருகோணமலையில் ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யுத்தம் நிறைவுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் நீங்கவில்லை, சம்பூரில் இன்னும் 600இற்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியேற்றப்படாமல் தொடர்ந்து பத்தாவது
வருடமாக முகாம்களில் வாடுகின்றனர்.
கடற்படையினரது கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற காணிகள் இன்னும் கையளிக்கப்படவில்லை.
அனல் மின் நிலயத்திற்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொள்ள முடியாது என்ற அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
திருகோணமலையில் ஆளுனர் செயலகத்திற்கு முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யுத்தம் நிறைவுக்கு வந்து பல ஆண்டுகள் கழித்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.
காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களின் துயரம் நீங்கவில்லை, சம்பூரில் இன்னும் 600இற்கும் அதிகமான குடும்பங்கள் மீள்குடியேற்றப்படாமல் தொடர்ந்து பத்தாவது
வருடமாக முகாம்களில் வாடுகின்றனர்.
கடற்படையினரது கட்டுப்பாட்டினுள் இருக்கின்ற காணிகள் இன்னும் கையளிக்கப்படவில்லை.
அனல் மின் நிலயத்திற்காக ஒதுக்கப்பட்டதாக கூறப்படும் காணிகளில் விவசாயிகள் நெற்செய்கையினை மேற்கொள்ள முடியாது என்ற அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
சுதந்திர தினமான இன்று திருமலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்
Reviewed by NEWMANNAR
on
February 04, 2016
Rating:
Reviewed by NEWMANNAR
on
February 04, 2016
Rating:

No comments:
Post a Comment