கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் பலி! 150 பேரின் நிலை என்ன?
கொல்கத்தாவில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விபத்துக்குள்ளானதில் பத்து பேர் பரிதாபமாக பலியாகினர்.
கொல்கத்தாவின் கணேஷ் டாக்கீஸ் பகுதியில் பாலம் கட்டும் பணிகள் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தன.
குடியிருப்பு அதிகமுள்ள பகுதியில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்ததில், பத்து பேர் பரிதாபமாக பலியாயினர்.
உடனடியாக விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக தகவல்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்
சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறுகையில், இடிபாடுகளுக்கு இடையே 150 பேர் வரை சிக்கியிருக்கலாம் என தான் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார்.
மற்றொருவர் கூறுகையில், மாநில அரசின் அலட்சியப் போக்கே இதற்கு காரணம் என்றும், குடியிருப்பு பகுதியில் பாலத்தை கட்ட அனுமதித்தது எப்படி எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்தது: 10 பேர் பலி! 150 பேரின் நிலை என்ன?
Reviewed by Author
on
March 31, 2016
Rating:

No comments:
Post a Comment