மன்னார் உயிலங்குளத்தில் வடமாகாண விவசாயக் கண்காட்சி– திங்கட்கிழமை 14-03-2016
வடமாகாண விவசாயக் கண்காட்சி–2016
உயிலங்குளத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் 14.03.2016 ஆம் திகதி தொடக்கம் 16.03.2016 ஆம் திகதி வரையான 3 நாட்கள் “சந்தையை நோக்கிய சூழல் நேயமான விவசாயம்” என்னும் தொனிப்பொருளிலான மகாண விவசாயக் கண்காட்சி - 2016 காலை 8.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணிவரை நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியின் தொடக்க நிகழ்வு 14.03.2016 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு வடமாகாண விவசாய
கமநல சேவைகள் கால்நடை அபிவிருத்தி கூட்டுறவு அபிவிருத்திää உணவு வழங்கல் நீர் வழங்கல்ää நீர்ப்பாசனம் மற்றும்; சுற்றாடல்;; அமைச்சர் கௌரவ பொ. ஐங்கரநேசன் அவர்களின் தலமையில் நடைபெறவுள்ளது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் கௌரவ நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டு வைபவ ரீதியாக கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
மாகாண விவசாயத் திணைக்களம் கீழ் வரும் நிறுவனங்களுடன் இணைந்து இக் கண்காட்சியினை ஒழுங்கமைத்துள்ளது.
மத்திய விவசாயத் திணைக்களம்
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம்
கமநல அபிவிருத்தித் திணைக்களம்
மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசனத் திணைக்களங்கள்
கூட்டுறவுத் திணைக்களம் (வ.மா)
சுகாதாரத் திணைக்களம் (வ.மா)
சுதேச மருத்துவத் திணைக்களம்(வ.மா)
தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை
தென்னை அராய்ச்சி நிலையம்
பனைவள அபிவிருத்திச் சபை
மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம்
தொழிற்துறைத் திணைக்களம்;(வ.மா)
மத்திய சுற்றாடல் அதிகார சபை
விதாதா வள நிலையம்
நன்னீர் மீன்பிடித் திணைக்களம்
விவசாய காப்புறுதி சபை
விவசாய உற்பத்தி சார் ஏற்றுமதியாளர்கள்
விவசாயத்துடன் தொடர்புடைய தனியார் கம்பனிகள்
வங்கிகள்
தனியார் நாற்றுமேடையாளர்கள்
அரச சார்பற்ற நிறுவனங்கள்
சமூகமட்ட அமைப்புக்கள்
இக் கண்காட்சியில் எதிர்காலத்தில் விவசாயத்துறை எதிர்நோக்கும் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையிலான சூழலுடன் நேயமான பயிர்ச்செய்கை முறைகள்ää ஆராய்ச்சித் தகவல்கள்ää விலங்கு வேளாண்மைää விவசாய இயந்திரமயமாக்கல்ää நீர்ப்பாசனம்ää மூலிகை வளர்ப்புää தென்னைப் பயிர்ச் செய்கைää பனைவள அபிவிருத்தி மற்றும் மரமுந்திரிகை அபிவிருத்தி தொடர்பான தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாகக் கண்காட்சி ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றது. பெறுமதி சேர் நடவடிக்கைகளிற்கு இக் கண்காட்சிப் பிரிவில் கூடியளவு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
கண்காட்சியில் உள்ளடக்கப்படும் விடயங்கள்
• விவசாய உற்பத்திப் புள்ளி விபரங்களும் தகவல்களும்
• நெல் உற்பத்தியில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும்
• உள்நாட்டு மரக்கறிகள்ää மேல்நாட்டு மரக்கறிகள்ää கிழங்குப்பயிர்கள்ää இலைமரக்கறிவகைகள்ää தானியங்கள்ää அவரைப்பயிர்கள்ää எண்ணெய்ப்பயிர்கள்ää பழப்பயிர்கள் ஆகியவற்றின் உற்பத்தி; திறனைமேம்படுத்தல்
• வடமாகாண மண்வளம்ää மண் சம்பந்தமான பிரச்சனைக்குரிய தீர்வுகள்
• உயர்தர நாற்றுக்களின் உற்பத்தி
• கொள்கலன்களில் மரக்கறிப் பயிர்ச்செய்கை.
• மண்ணின்றிய பயிர்ச்செய்கை
• வரட்சியான காலங்களில் வலைவீடுகளில் மரக்கறிப்பயிர்ச்செய்கை
• நிலைபேறானவீட்டுத்தோட்டம்
• சேதனவிவசாயம்
• ஒருங்கிணைந்த விவசாயப்பண்ணை
• சிறுதானியப் பயிர்ச்செய்கையை மேம்படுத்தல்
• பயிர்ப்பாதுகாப்பு செயல்முறைகள்
• நகர்ப்புற வீட்டுத்தோட்டம்
• அலங்கார தாவரவளர்ப்பு
• ஊடு பயிர்ச்செய்கை
• அறுவடைக்குப் பின்னான இழப்புக்களைக் குறைத்தலும் தரத்தினைமேம்படுத்தலும்
• உற்பத்திப் பொருட்களின் பெறுமானத்தைஅதிகரித்தல்
• விவசாய ஆராய்ச்சிச் செயற்பாடுகள்
• பண்ணை இயந்திரங்களைமேம்படுத்தல்
• காளான் செய்கை
• நீர்முகாமைத்துவமும் நிலத்தடிநீர் சேமிப்பும்
• விலங்குவேளாண்மை
• நன்னீர் மீன் வளர்ப்பு
• மூலிகைத் தாவர விருத்தியும் பயன்பாடும்
• தென்னை அபிவிருத்தி;
• பனைவள அபிவிருத்தி;
• மரமுந்திரிகை அபிவிருத்தி
விற்பனை
• விவசாயம் தொடர்பானபிரசுரங்கள்
• விதைகள்
• பழமரக்கன்றுகள் மற்றும் அலங்காரத் தாவரங்கள்
• தனியார் கம்பனிகளின் உற்பத்திகள் (விதைகள்ää விவசாய உபகரணங்கள்ää மற்றும் இயந்திரங்கள்)
• பெறுமதிசேர் உணவுப் பொருட்கள்
பொதுமக்கள்ää விவசாயிகள் கமக்கார் அமைப்புக்களின் உறுப்பினர்கள் கிராம அபிவிருத்தி சங்கங்களின்; உறுப்பினர்கள்ää மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் உறுப்பினர்கள் ஏனைய சமூகமட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள்ää பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்ää உயர் கல்வி நிறுவனங்களின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் இக் கண்காட்சியில் பங்குபற்றி பயன் பெற அன்புடன் அழைக்கப்படுகின்றார்கள்.
சி.சிவகுமார்
மாகாண விவசாயப் பணிப்பாளர் (வ.மா)
மன்னார் உயிலங்குளத்தில் வடமாகாண விவசாயக் கண்காட்சி– திங்கட்கிழமை 14-03-2016
Reviewed by Author
on
March 13, 2016
Rating:

No comments:
Post a Comment