அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீச்சரம் ஸ்ரீசபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபையினரின் ஆன்மீகப்பெருவிழாவும் ,தம்பு துரைரா சா அவர்களின் 'வாழ்க்கைச்சுவடுகள்' நூல் வெளியீட்டு விழாவும்

மன்னார்,திருக்கேதீச்சரம் ஸ்ரீசபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபையினரின் ஆன்மீகப்பெருவிழாவும் , மேற் படி சபையின் செயலாளரான கலாபூசணம்  தம்பு துரைரா சா அவர்களின் 'வாழ்க்கைச்சுவடுகள்' நூல் வெளியீட்டு விழாவும்  அண்மையில் மிகச்சிறப்பாக  திருக்கேதீச்சரதில் நடைபெற்றது

„திருப்பணித ; தவமணி‟ சி.தியாகராசா(S.T.R.) அவர்களின்  தலைமையில் இடம்பெற்ற  இவ்விழாவில், பிரதம விருந்தினர்களாக திருக்கேதீச்சர ஆலய
திருப்பணிச்சபைத்  தலைவர் திரு.கந்தையா நீலகண்டன்  இலங்கைக்கான  இந்தியத் துணைத்தூதர் திரு.ஆ..நடராஜன் ஆகியோரும்; சிறப்பு  விருந்தினர் களாக சிரேஸ்ட சட்டவல்லுனர் கனக ஈஸ்வரன்,அகில இந்துமா மன்றச் செயலாளர் சி.தில்லைநடராஜா, மாத்தளை வடிவேலன்,திரு.செ.இராகவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை ஆசிரியர் திரு.சோ.றோகன்ராஜ் சிறப்புரையாற்றினார்.

'வாழ் க்கைச்சுவடுகள்' நூல் அறிமுகவுரையை பேராசிரியர் கனகசபாபதி நாகேஸ்வரன் அவர்கள் நிகழ்த்த , தமிழருவி த.சிவகுமாரன் அவர்கள் நூல் நயவுரையாற்றினார்.

முதற்பிரதியை பிரதம விருந்தினர் களிடமிருந்து சிரேஸ்ட சட்டவல்லுனர் கனக ஈஸ்வரன்அவர்கள் பெற் றுக் கொண்டார்.

நிகழ்ச்சிகளை சிவன் அருள் இல்ல நிர்வாக ஆலோசகர் திரு.வே.பொ.மாணிக்கவாசகர் தொகுத்து வழங்கினார்.

பிரமுகர்கள் வேல் வடிவிலான நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
















திருக்கேதீச்சரம் ஸ்ரீசபாரத்தின சுவாமிகள் தொண்டர் சபையினரின் ஆன்மீகப்பெருவிழாவும் ,தம்பு துரைரா சா அவர்களின் 'வாழ்க்கைச்சுவடுகள்' நூல் வெளியீட்டு விழாவும் Reviewed by NEWMANNAR on March 13, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.