நான்கு மாத குழந்தைக்கு 20 முறை மாரடைப்பு!
மும்பையில் பிறந்து நான்கு மாதங்களே ஆன குழந்தைக்கு 20க்கும் மேற்பட்ட தடவை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை அருகே சோலாப்பூரை சேர்ந்த நான்கு மாத குழந்தை அதிதி கில்பிலே.
பிறந்து நான்கு மாதமே ஆன அதிதிக்கு, 20க்கும் மேற்பட்ட தடவை மாரடைப்பு ஏற்பட்டதால் தற்போது மும்பை மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
குழந்தை பரிசோதித்த மருத்துவர் கூறுகையில், குழந்தைக்கு இடது கரோனரி இதய நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது, மூன்று லட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு இந்த பாதிப்பு ஏற்படும்.
குழந்தையின் இதயத்திற்கு சிறிதளவு மட்டுமே இரத்த ஓட்டம் செல்வதால் தான் அடிக்கடி மாரடைப்பு ஏற்படுகிறது.
தற்போது சிகிச்சை அளித்து வரும் நிலையில் சாதாரண வாழ்க்கை வாழ இன்னும் எட்டு முதல் ஒன்பது மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் எடை வெகுவாக குறைந்துவிட்டதாகவும் அதிதியின் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
நான்கு மாத குழந்தைக்கு 20 முறை மாரடைப்பு!
Reviewed by Author
on
March 05, 2016
Rating:
Reviewed by Author
on
March 05, 2016
Rating:


No comments:
Post a Comment