அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சித்தி விநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு-21-03-2016-படங்கள் இணைப்பு

மன்னார் சித்தி விநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு-21-03-2016 மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
இவ்விழாவிற்கு கௌரவ விருந்தினராக மன்னார் மாவட்ட வலையக்கல்விப்பணிப்பாளர் திருமதி சுகந்தி செபஸ்ரியன் மன்னார் மாவட்ட முதலாவது பெண் கலாநிதியான ஹிமலதா இராஜேஸ்வரன் அவர்களோடு ஏனைய பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மன்-சித்திவிநாயகர் பாடசாலை மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் என அனைவரும் கலந்து கொண்டணர.
2015 வருடத்திற்கான ஆரம்பப்பரிவு இடைநிலைப்பரிவு  கலைப்பிரிவு வர்த்தகப்பிரிவு விஞ்ஞானப்பிரிவு சேர்ந்த மாணவமாணவிகள் கல்வியிலும் விளையாட்டிலும் ஆங்கிலமொழி தமிழ்மொழித்தின போட்டிகளில் கலந்து கொண்டு மாவட்டம் மாகாணம் தேசியம் மட்டங்களில் சாதனை புரிந்தவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள் புலமைப்பரீட்சையில் சித்தியெய்தியவர்கள் சிறந்த விளையாட்டு வீரர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் சாரணீயர்கள் என்று ஒவ்வொரு துறைக்கும் பாராட்டி பரிசுகள் நினைவுச்சின்னங்கள் பரிசளிப்பு விழாவில் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருதும் நினைவுச்சின்னம் பெறும் மாணவ மாணவிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய நூலும் வெளியிடப்பட்டது.

மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரியின் பிதாமகனும் நிறுவுனருமாகிய பெருமகன் குமரையா முத்துக்குமாரு அவர்களின் நினைவுப்பேருரையை மன்னார் மாவட்ட முதலாவது பெண் கலாநிதியான ஹிமலதா இராஜேஸ்வரன் அவர்கள் ஆற்றவும் பாடசாலை பல்துறை வளர்ச்சியில் பணியாற்றிய முன்னாள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவமாணவிகளுடன் தற்போதைய ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலை அபிவிருத்திச்சங்கம் பெற்றோர்கள் பாடசாலை அபிவிருத்திக்குழு ஏனைய எல்லா வழிகளிலும் உதவிய அனைவருக்கும் பாடசாலை அதிபர் T.தனேஸ்வரன் அவர்கள் வாழ்த்துக்களும் பாராட்டும் தெரிவித்தார் அத்துடன் கலைநிகழ்வுகளும் இடம் பெற்று பரிசளிப்பு விழா இனிதே நிறைவுற்றது.








மன்னார் சித்தி விநாயகர் தேசிய இந்துக்கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு-21-03-2016-படங்கள் இணைப்பு Reviewed by Author on March 28, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.