கனடா ஓன்ராரியோவில் தமிழர் ஒருவர் நீதிபதியானார்.,,,,
கனடாவில் நீண்டகாலமாக வழக்கறிஞராக பதவி வகித்த திருமதி. தெய்வா மோகன் அவர்கள் ஒன்ராரியோவில் நீதிபதியாக பதவி பிரமாணம் செய்து கொண்டார் என அறியப்படுகிறது.திருமதி. தெய்வா அவர்கள் சாவகச்சேரியினை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது
இவர் காலஞ்சென்ற அரசியல்வாதியும், தமிழர் சுயாட்சிக் கழகத்தின் தலைவரும் முன்னாள் ஊர்காவற்றுறை பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் மொன்றியால் மாநகர-ில் நீண்டகாலம் வாழ்ந்து மரணத்தை தழுவியவருமான திரு நவரத்தினம் அவர்களின் புதல்வர் தான் திரு ஜெகன் மோகன். இவர் கடந்த வருடம் காலமானார். ரொரென்ரோவில் 1985ம் ஆண்டு தமது சட்ட அலுவலகத்தைத் திறந்தவர் திரு ஜெகன்மோகன்- தெய்வா மோகன் தம்பதியினர்
காலஞ்சென்ற ஜெகன்மோகன் அவர்களின் துணைவியார்தான் தற்போது கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல் தமிழ் பேசும் நீதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள திருமதி தெய்வா மோகன் ஆவார்.
இதில் ஒரு முக்கியமான விடையம் என்னவென்றால் காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர் திரு வி. நவரட்னம் அவர்கள் ஒரு சட்டத்தரணி, அவரது புதல்வர் ஜெகன் மோகன் ஒரு சட்டத்தரணி, ஜெகன் மோகன் அவர்களின் துணைவியார் தற்போதைய நீதிபதி- முன்னாள் சட்டத்தரணி, இந்த தம்பதியினரின் ஒரே புதல்வரும் ஒரு சட்டத்தரணி என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கனடா ஓன்ராரியோவில் தமிழர் ஒருவர் நீதிபதியானார்.,,,,
Reviewed by Author
on
March 28, 2016
Rating:

No comments:
Post a Comment