தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 2500 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன...
அதிவேக நெடுஞ்சாலை ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இதுவைரயில் (2011 முதல் 2016) ஆண்டு வரையில் 2500 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துக்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் அதிகாரியொருவர் சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
வாகனச் சாரதிகளின் கவனயீனம் மற்றும் அவசரம் காரணமாகவே இவ்வாறு விபத்துக்கள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்துக்களில் 300 விபத்துக்கள் பாரியளவிலானவை எனவும் 2200 விபத்துக்கள் சாதாரணமானவை எனவும் தெரிவித்துள்ளார்.
விபத்துக்களினால் சொத்துக்களுக்கு பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் சுமார் 17 கோடி ரூபா வரையில் சேதம் ஏற்பட்டள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 2500 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன...
Reviewed by Author
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment