செட்டிகுளத்தில் டிப்பர் மோதி 6 வயது சிறுவன் மரணம்....
வவுனியா, செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் டிப்பர் வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் ஒருவன் மரணமடைந்துள்ளதாக செட்டிகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மன்னார் - மதவாச்சி வீதியில் பயணித்த டிப்பர் வாகனம் செட்டிகுளம், நேரியகுளம் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட சிறுவனை மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் விதுசன் (வயது 6) என்ற சிறுவனே மரணமடைந்துள்ளான்.
டிப்பர் வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
செட்டிகுளத்தில் டிப்பர் மோதி 6 வயது சிறுவன் மரணம்....
Reviewed by Author
on
March 07, 2016
Rating:
Reviewed by Author
on
March 07, 2016
Rating:



No comments:
Post a Comment