தெருவில் வாழும் நபருக்கு 14 இலட்சம் ரூபா பரிசு....
அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவில் சிறையிலிருந்து தப்பித்த இரு கைதிகளை பிடிக்க பொலிஸாருக்கு உதவியதற்காக, தெருக்களில் வாழும் ஒருவருக்கு 14 இலட்சம் ரூபா பரிசாக வழங்கப்படவுள்ளது.
உள்ளூராட்சி சிறையிலிருந்து 6 நாட்களுக்கு முன்பு தப்பித்த இவர்களை பிடிக்க மாகாண அளவில் தேடுதல் வேட்டை நடைபெற்றது.
இதனையடுத்து, சிறையிலிருந்து தப்பித்திருந்த குறித்த இரு கைதிகளின் புகைப்படத்தை செய்திகளில் பார்த்த மேத்தியூ ஹே சாப்மான் அவர்களை ஒரு திருடப்பட்ட வேனில் அடையாளம் கண்டுள்ளார்.
குறித்த இந்த பரிசு தொகை 4 பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டாலும், ஹே சாப்மானுக்கு அதிக பங்கு தொகையை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
தெருவில் வாழும் நபருக்கு 14 இலட்சம் ரூபா பரிசு....
Reviewed by Author
on
March 17, 2016
Rating:

No comments:
Post a Comment