வவுனியாவில் அருவித்தோட்டம் சுற்றுலா மையம் திறந்துவைப்பு...படங்கள் இணைப்பு
வடக்கு மாகாண சுற்றுலாத்துறை அமைச்சின் 2015 ஆம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை மூலம் நிதி ஒதுக்கப்பட்டு,வவுனியா மாவட்ட செட்டிகுளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச சபையால் அமைக்கப்பட்டுள்ள,
அருவித்தோட்டம் சுற்றுலா மையத்தை 16-03-2016 புதன் காலை 11.30 மணியளவில் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் த.குருகுலராஜா அவர்களும் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் அவர்களும் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், வடக்கு மாகாண சபையின் வவுனியா மாவட்ட உறுப்பினர்களான ஜி.டி.லிங்கநாதன், எம்.தியாகராஜா, ஆர்.இந்திரராஜா, எம்.பி.நடராஜா ஆகியோரும் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.
வவுனியாவில் அருவித்தோட்டம் சுற்றுலா மையம் திறந்துவைப்பு...படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
March 16, 2016
Rating:

No comments:
Post a Comment