மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் கோரிக்கை-Photos
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் கடமை நிறைவேற்று அதிபர்களாக பணியாற்றிய அதிபர்கள், நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார் பதிற்கடமை அதிபர்கள் சங்கம் இந்த கோரிக்கையை நேற்று (10) முன்வைத்துள்ளது.
கடந்த பல வருடங்களாக கடமை நிறைவேற்று அதிபர்களாக பணியாற்றிய அதிபர்கள் புறக்கணிக்கப்பட்டு, அப்பதவிக்கு புதிதாக அதிபர்களை சேர்க்கவுள்ளதை ஆட்சேபித்து பல வருடங்களாக சேவையாற்றிய அதிபர்கள் இந்த கேரிக்கையை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று (10) மாலை 4 மணியளவில் மன்னார் பிரஜைகள் குழு அலுவலகத்தில், குறித்த சங்கம் விசேட கலந்துரையாடல் ஒன்றிணை நடத்தியிருந்தனர்.
கடமை நிறைவேற்று அதிபர்களாக 1 வருடம் முதல் 10 வருடங்கள் வரை கடமையாற்றியவர்களை நிரந்தரமாக்க கல்வி அமைச்சு கவனம் செலுத்தி, அமச்சரவை பத்திரம் சமர்பிப்பதன் ஊடாக பாதிக்கப்பட்ட அதிபர்களுக்கு தீர்விணை பெற்று கொடுக்க வேண்டும் என குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, பதிக்கப்பட்ட அதிபர்கள் தமது பிரச்சிணைகள் தொடர்பாக மகஜர் ஒன்றிணை மத்திய கல்வி அமைச்சருக்கு அனுப்பிவைப்பதற்கு முடிவுகள் எடுக்கப்பட்டு இன்றய தினம் மகஜர் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
குறித்த, கூட்டத்தில் மன்னார் பதிற்கடமை அதிபர்கள் சங்கத்தின் தலைவர் எம்.வை.மாகீர், அதன் மடு தலைவர் ஏ.எல்.விலால் உள்ளிட்ட அதிபர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
நாடு பூராகவும் 2600ற்கும் அதிகமான கடமை நிறைவேற்று அதிபர்கள் கடமையாற்றிவருகின்றமை குறிப்பிடதக்கது.
மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் கோரிக்கை-Photos
Reviewed by NEWMANNAR
on
March 11, 2016
Rating:

No comments:
Post a Comment