அண்மைய செய்திகள்

recent
-

இன்ஸ்டாகிராமில் சேர்ந்தார் போப் பிரான்சிஸ்.!


டுவிட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் சேர்ந்தார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஏற்கனவே டுவிட்டர் சமூக இணையதளத்தில் உள்ளார். இவர் அதன் மூலம் 9 மொழிகளில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரை 2 கோடியே 50 இலட்சம் பேருக்கு மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்.

இந்த நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்திலும் இணைந்துள்ளார். இத்தகவலை வாடிகன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அதில் தான் பிரார்த்தனை செய்யும் போட்டோவை பதிவு செய்துள்ளார். அதனுடன் எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வாசகத்தையும் இணைத்துள்ளார்.

அது 9 மொழிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு இன்ஸ்டாகிராம் தலைமை நிர்வாக இயக்குனர் கெவின் சிஸ்ட்ரோம் போப் ஆண்டவர் பிரான்சிசை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்ஸ்டாகிராமில் சேர்ந்தார் போப் பிரான்சிஸ்.! Reviewed by Author on March 22, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.