வித்தியா கொலை வழக்கின் 11ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் 11ஆவது சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவருக்கான விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
புங்குதீவு மாணவி வித்தியா கடந்த ஆண்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்குடன் தொடர்புடைய 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 3ஆம் திகதி 11 ஆவது சந்தேகநபரான உதயசூரியன் சுரேஸ்கரன் என்பவர் குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
கைது செய்யப்பட்டவர், ஏனைய சந்தேகநபர்களுடன் நீதிமன்றில் முன்னிலைபடுத்தாமல், சந்தேகநபரை தனியே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி வந்தனர்.
இதன்படி, சந்தேகநபரை இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் ஏம்.எம்.எம்.றியாஸ் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
முன்னதாக கடந்த 4ஆம் திகதி குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சம்பவத்துடன் தொடர்புடைய 11ஆவது சந்தேகநபரை கைது செய்துள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அத்துடன், குறித்த நபரே கொலை நடைபெறுவதற்கு முன்னைய நாட்களில் யாழ்ப்பாணத்திலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை ஏனைய சந்தேக நபர்களுக்கு விநியோகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, கொலை இடம்பெற்ற வேளை 11ஆவது சந்தேகநபர் குறித்த பகுதியில் இருந்ததாக, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்ததாக குற்றத்தடுப்பு பிரிவினர் நீதி மன்றில் அறிவித்திருந்தனர்.
அத்துடன், வாக்கு மூலத்தின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் குற்ற தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா கொலை வழக்கின் 11ஆவது சந்தேகநபருக்கு விளக்கமறியல்!
Reviewed by Author
on
March 22, 2016
Rating:

No comments:
Post a Comment