இப்படியும் இறுதிச்சடங்கா? திறந்த கண்களுடன் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருந்த சடலம்!
அமெரிக்காவில் இறந்துபோன ஒருவரின் இறுதிச் சடங்கை உறவினர்கள் நூதனமுறையில் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் பெர்டோ ரிகோவில் உள்ள சான் ஜுவன் நகரை சேர்ந்தவர் பிட்டோ.
கடந்த 3ம் திகதி மர்ம நபர்களால் பிட்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்துபோன பிட்டோ அனைவரிடத்திலும் கலகலப்பாகவும் அன்பாகவும் பேசக்கூடியவர் என்றும் எப்போதும் உற்சாகமாக இருக்கக்கூடியவர் என்றும் கூறப்படுகிறது.
இதனால் பிட்டோவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இறுதிச் சடங்கை நூதனமுறையில் நடத்த அவரது உறவினர்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து அவருக்கு விருப்பமான உடை மற்றும் தொப்பியை அணிவித்த உறவினர்கள் அவர் கையில் சிகரெட் வைத்திருப்பது போன்று நாற்காலியில் உட்கார வைத்தனர்.
அவரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்த உறவினர்கள் பிட்டோ உயிருடன் இருப்பது போன்றே உணர்ந்து நெகிழ்ந்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரி கூறுகையில், பிட்டோ மிகவும் சுறுசுறுப்பானவன். அவன் எப்போதும் உற்சாகமாக இருப்பான்.
எனவே அந்த கோலத்தில் அவனை நினைவுக்கூரவே இறுதிச்சடங்கை இவ்வாறு நடத்தினோம் என்று தெரிவித்துள்ளார்.
இப்படியும் இறுதிச்சடங்கா? திறந்த கண்களுடன் கையில் சிகரெட்டுடன் அமர்ந்திருந்த சடலம்!
Reviewed by Author
on
March 13, 2016
Rating:

No comments:
Post a Comment