அண்மைய செய்திகள்

recent
-

கண்­புரை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு கண்­வில்­லை­களை புதுப்­பிப்­பதன் மூலம் சிகிச்சை....


கண்­புரை நோயால் பாதிக்­கப்­பட்டு செயற்கை கண் வில்­லைகள் பொருத்­தப்­பட வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­ட­வர்­க­ளுக்கு, அவர்­க­ளது சொந்த கண்­வில்­லை­களை மீளப் பயன்­ப­டுத்த வழி­வகை செய்யும் புரட்­சி­கர சிகிச்சைத் தொழில்­நுட்பம் சீன விஞ்­ஞா­னி­களால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

குருட்­டுத்­தன்­மைக்­கான அனைத்து கார­ணி­ க­ளுடன் ஒப்­பி­டு­கையில் கண்­புரை நோயால் பாதிக்­கப்­பட்டு பார்­வையை இழப்­ப­வர்கள் தொகை அரைப் பங்­காக உள்­ளது.

இந்­நி­லையில் கண்­புரை நோய்க்­கான வழ­மை­யான சிகிச்­சை­களின் போது அல்ட்­ரா­சவுண்ட் தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்ட கண்­வில்­லைகள் மென்­மை­யாக்­கப்­பட்டு அகற்­ற­பட்ட பின் னர் செயற்கை வில்­லைகள் பொருத்­தப்­ப­டு­கின்­றன.

கண்­ணுக்குள் பின்­பு­ற­மாக பொருத்­தப்­படும் இந்த செயற்கை வில்­லை­களால் குறிப்­பாக சிறு­வர்­க­ளுக்கு பல்­வேறு பாதிப்­புகள் ஏற்­ப­டு­வது வழ­மை­யா­க­வுள்­ளது.

இந்­நி­லையில் மேற்­படி பிரச்­சி­னைக்குத் தீர்வு காணும் முக­மாக சீன சண் யட் ஸென் பல்­க­லைக்­க­ழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அமெ­ரிக்க கலி­போர்­னிய பல்­க­லைக்­க­ழகத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகளுடன் இணைந்து மேற்­படி புரட்­சி­கர சிகிச்சை முறை­மையை கண்­டு­பி­டித்­துள்­ளனர்.

இந்த சிகிச்சை முறை­மையின் பிர­காரம் கண்ணில் ஏற்­ப­டுத்­தப்­படும் சிறிய கீறல் மூலம் கண்­வில்­லையை மூடி­யுள்ள புரை அகற்­றப்­ப­டு­கி­றது. இதன்­போது அந்த வில்­லையின் மேற்­ப­ரப்­பி­லுள்ள அதில் ஏற்­படும் சேதங்­களை சுய­மாக சீர்­செய்யும் மூல­வு­யிர்க்­க­லங்கள் நீக்­கப்­ப­டாது விடப்­ப­டு­கின்­றன. இதன் மூலம் புரை அகற்­றப்­பட்ட அந்தக் கண்­வில்லை மீளவும் செயற்­றிறன் மிக்க கண்­வில்­லை­யாக மாறு­வது சாத்­தி­ய­மா­கி­றது.

இது தொடர்­பான பரி­சோ­த­னைகள் முயல்­க­ளிலும் குரங்­கு­க­ளிலும் வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ள­பட்­ட­தை­ய­டுத்து தற்­ போது இந்த சிகிச்சை முறைமை 12 சிறு­வர்­களில் பரீட்­சார்த்­த­மாக பிர­யோ­கிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த சிகிச்­சையின் போது புது­பிக்­கப்­பட்ட கண்­வில்­லைகள் 8 மாதங்­களில் வழ­மை­யான அள­வையும் செயற்­றி­ற­னையும் அடைந்­த­தாக விஞ்­ஞா­னிகள் தெரி­விக்­கின்­றனர்.

வயோ­தி­ப­மா­த­லுடன் தொடர்­பு­பட்ட கண்­புரை நோயால் சுமார் 20 மில்­லியன் பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மேற்­படி பாதிப்­புடன் சில சிறு­வர்­களும் பிறந்­துள்­ளனர்.

அதே­ச­மயம் ஜப்­பா­னிய ஒஸாகா பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த ஆய்­வா­ளர்­கள், ஆய்­வு­கூ­டத்தில் மூல­வு­யிர்க்­க­லங்­க­ளி­லி­ருந்து புதி­தாக கண்­வில்­லையை விருத்தி செய்­வதில் வெற்றி பெற்­றுள்­ளனர்.

அவர்கள் மூல­வு­யிர்க்­க­லங்­களைப் பயன் படுத்தி கண்வில்லைகளை மட்டுமல்லாது விழிவெண்படலம், விழித்திரை, கண்ணின் உட்பகுதி என்பவற்றையும் வெற்றிகரமாக விருத்தி செய்துள்ளனர்.

முயல்களில் பரிசோதிக்கப்பட்ட இந்த பிந்திய சிகிச்சை முறைமை எதிர்காலத்தில் மனிதர்களில் பிரயோகிக்கப்பட்டு பரிசோ திக்கப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தெரி விக்கின்றனர்.

கண்­புரை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு கண்­வில்­லை­களை புதுப்­பிப்­பதன் மூலம் சிகிச்சை.... Reviewed by Author on March 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.