இ– 20 உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகள் வெற்றி ...
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று போட்டிகள் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ஸ்கொட்லாந்தை 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது சிம்பாப்வே அணி.
முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் வில்லியம்ஸ் 53 ஓட்டங்களை விளாசினார். பதிலுக்கு ஆடிய ஸ்கொட்லாந்து அணி 19.4 ஓவர்களில் 136 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவிக்கொண்டது.
இதேவேளை ஹொங் கொங் மற்றும் ஆப்கானிஸ் தான் அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங் கொங் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இதில் ஆப்கானிஸ்தானின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஸஷாட் 41 ஓட்டங்களை விளாசினார்.
இ– 20 உலகக் கிண்ண தகுதி காண் போட்டிகளில் ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணிகள் வெற்றி ...
Reviewed by Author
on
March 11, 2016
Rating:

No comments:
Post a Comment