அண்மைய செய்திகள்

recent
-

தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வடமாகாண சபை நிபந்தனையுடன் அங்கீகாரம்


தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வடமாகாண சபை திருத்தங்களுடன் அங்கீகரிப்பை வழங்கியிருக்கும் நிலையில், சபையின் திருத்தங்களை கருத்தில் கொள்ளாவிட்டால் வழங்கிய அங்கீகரிப்பை மீள் பரிசீலனை செய்வோம். என்ற நிபந்தனையும் வடமாகாண சபையினால் விதிக்கப்பட்டிருக்கின்றது.

தகவல் அறியும் உரிமைச்சட்டம், கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டமூலம், வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் ஆகியவற்றின் மீதான விவாதங்களுக்கான விசேட அமர்வு இன்றைய தினம் மாகாண சபையின் பேரவை செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போதே மேற்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மாகாணசபை திருத்தங்களுடன் அங்கீகரித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக சபை ஸ்ரீயில் பேசப்படுகையில்,

ஆளுங்கட்சி சார்பில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டம் உண்மையில் தகவல்களை அறிந்து கொள்வதற்கான சட்ட மூலமாக இருக்கவேண்டும்.

தவிர்த்து தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் உண்மைகளை மறைப்பதற்கான சட்டமூலமாக இருக்க கூடாது என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் க.சர்வேஸ்வரன், தேசிய பாதுகாப்பு என்ற விடயம் தெளிவாக்கப்பட வேண்டும்.

குறிப்பாக கடத்தப்பட்டவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் இல்லை எனவே அவர்கள் தொடர்பான தகவல்கள் கேட்கப்படும்போது அதனை தேசிய பாதுகாப்பு என்ற வரையறைக்குள் வைத்து பார்க்க முடியாது.

கடத்தல்கள், கொலைகள் தேசிய பாதுகாப்புக்குள் அடங்கப்போவதில்லை. மேலும் அவர்களுக்கு ஆட்கொணர்வு மனு கொண்டுவர முடியவில்லை.

அதைவிட அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என அரசாங்கமே கூறுகின்றது. எனவே கடத்தப்பட்டவர்கள், கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே? என்பது தெரியப்படுத்தப்பட வேண்டும். மேலும் அதனை யார் கேட்கலாம் என்பதும் கூட தெளிவு படுத்தப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் குறித்த சட்டமூலம் தொடர்பாக சபையில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும் மாகாண சபையின் திருத்தங்களை அரசாங்கம் ஒத்துக் கொள்ளாவிட்டால் எமது அங்கீகாரத்தை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் மாகாணசபையின் திருத்தங்களை அரசாங்கம் ஒத்துக்கொள்ள வேண்டும். இல்லாதுபோனால் எமது அங்கீகாரத்தை நாங்களே மீள் பரிசீலனை செய்வோம் என்ற தீர் மானத்துடனும், திருத்தங்களுடனும் மேற்படி சட்டமூலத்திற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டமூலம்,நாடாளுமன்ற உறுப்பினர் முன்கொண்டுவந்த மேற்படி சட்டமூலம் தொடர்பாக இன்றைய மாகாண சபையின் அங்கீகரிப்பை வழங்குவதற்கான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது பேசிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எங்களுடைய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கொண்டுவந்த சட்ட மூலத்தை நாங்கள் விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது.

எனவே இந்தச் சட்டமூலம் தொடர்பாக அவருடன் பேசி 3 மாதங்களுக்குள் அங்கீகரிப்பை வழங்கலாம் எனக்கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சபையில் பேசுகையில்,

கால எல்லை குறிக்காமல் நாடாளுமன்ற உறுப்பினருடன் பேசி அங்கீகரிப்பை வழங்கலாம் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து இந்த சட்டமூலத்திற்கான அங்கீகரிப்பை நீரியல்வளத்துறை அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் பேசிய பின்னர் வழங்கலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டது.

இதனையடுத்து நீரியல்வளத்துறை அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடன் பேசி அங்கீகரிப்பை வழங்கலாம் என்ற யோசனை சபையில் ஒத்துக் கொள்ளப்பட்டு மேற்படி சட்டமூலத்திற்கான அங்கீகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

வடமாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் மீதான விவாதம், மாகாண போக்குவரத்து நியதிச்சட்டம் மீதான விவாதம் இன்றைய தினம் மாலை எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் நேரம் போதாமையால் 24ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு வடமாகாண சபை நிபந்தனையுடன் அங்கீகாரம் Reviewed by NEWMANNAR on March 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.