பிரபல நகைச்சுவை நடிகர் கலாபவன் மணி மரணம்!
மலையாள திரைப்பட உலகின் பிரபல நகைச்சுவை நடிகரான கலாபவன் மணி கல்லீரல் நோய் உயிரிழந்துள்ளார்.
தனது நகைச்சுவையான நடிப்பால் மலையாள திரையுலகில் முத்திரை பதித்த கலாபவன் மணி,சில தமிழ் திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவருக்கு வயது 45, நகைச்சுவையை தாண்டி, குரல் மாற்றி பேசி மிமிக்கிரி செய்வதில் வல்லவர்.
இந்நிலையில், கல்லீரல் நோய் காரணமாக கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது மறைவால் கேரள திரையுலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
பிரபல நகைச்சுவை நடிகர் கலாபவன் மணி மரணம்!
Reviewed by Author
on
March 06, 2016
Rating:

No comments:
Post a Comment