முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை......தோல்வியில் முடிந்தது.....

உடலில் உள்ள உறுப்புகளில் ஏதேனும் ஒன்று விபத்தினால் பாதிக்கப்பட்டாலோ அல்லது பிறக்கும் போது குறைபாடுடன் இருந்தாலோ மாற்று அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படுகின்றது.
தற்போதைய நிலையில் இதயம், சிறுநீரகம், கல்லீரல், கைகள், தோல்கள் உள்ளிட்ட உறுப்புகள் இந்த சிகிச்சையின் மூலம் மாற்றி அமைக்கப்படுகின்றன.
இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த லிண்ட்சி என்ற பெண்மணிக்கு கடந்த பிப்ரவரி 24ஆம் திகதி கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட முதல் கருப்பை மாற்று சிகிச்சையான இது வெற்றியடைந்ததால் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
ஆனால் அடுத்த நாளே லிண்ட்சியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் உடனடியாக அவருக்கு பொருத்தப்பட்ட கருப்பையை மருத்துவர்கள் அகற்றினர்.
பிறவியிலேயே கருப்பை இல்லாதவரான அப்பெண்ணின் உடல், இந்தப் புதிய கருப்பையை ஏற்றுக் கொள்ளவில்லை என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
தற்போது கருப்பை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் முதல் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை தோல்வியில் முடிந்தது அந்நாட்டு மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முதல் கருப்பை மாற்று அறுவைச் சிகிச்சை சுவீடனில் கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் கருப்பை மாற்று அறுவை சிகிச்சை......தோல்வியில் முடிந்தது.....
Reviewed by Author
on
March 12, 2016
Rating:

No comments:
Post a Comment