ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து இளம்பெண் சாதனை....
ஜேர்மனி நாட்டை சேர்ந்த இளம் நீச்சல் வீராங்கனை ஒருவர் ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஜேர்மனியில் உள்ள Marburg என்ற நகரை சேர்ந்த Nathalie Pohl(21) என்ற இளம்பெண் தான் இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.
நீச்சல் போட்டிகளில் அபார ஆர்வம் உள்ள அவர் ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவிற்கு குறுகிய நேரத்தில் நீச்சல் அடித்து செல்லவேண்டும் என திட்டமிட்டுள்ளார்.
இதன் அடிப்படையில், நேற்று முன் தினம் ஸ்பெயின் நாட்டில் உள்ள Tarifa என்ற கடற்கரை பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
14 டிகிரி அளவில் வெப்பம் கொளுத்திய நிலையிலும் தனது முயற்சியை கைவிடாத அவர் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மொரோக்கோவில் உள்ள Point Cires என்ற பகுதியை சென்றடைந்தார்.
அதாவது, 15 கி.மீ தூரம் உள்ள தொலைவினை 2 மணி நேரம் 53 நிமிடங்களில் கடந்து முந்திய சாதனையை முறியடித்துள்ளார்.
இதன் மூலம் முந்திய அவுஸ்திரேலிய நாட்டு வீரரின் சாதனையை 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே கடந்து தற்போது உலகசாதனையை படைத்துள்ளார்.
இதுமட்டுமல்லாமல், இந்த இளம் பெண் பல்வேறுநீச்சல் போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசுகளையும் வென்றுள்ளார்.
இவரது அடுத்த முயற்சியாக 32 கி.மீ தொலைவுள்ள இங்கிலீஷ் கால்வாயை கடந்து சாதனை படைக்கதற்போது திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு 3 மணி நேரத்தில் கடந்து இளம்பெண் சாதனை....
Reviewed by Author
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment