சுவிஸ்லாந்துக்கு போகமுற்பட்ட முல்லையைச் சேர்ந்தவர்களுக்கு துருக்கியில் நடந்த சித்திரவதை! ஒருவர் பலி
வடக்கு, கிழக்குத் தமிழர்களில் பெருமளவானவர்களுக்கு இருக்கும் வெளிநாட்டு மோகத்தைப் பயன்படுத்தி கனடா, சுவிஸ், லண்டன் என பல இடங்களுக்கு அவர்களைக் கொண்டு சென்று விட்டுவிடுவதாக பெருமளவு பணத்தைப் பெற்று அவர்களை நடுத்தெருவில் விடுவது மட்டுமல்லாது கடும் சித்திரவதை செய்து உயிர்களையும் பறிக்கும் அவலம் தற்போது பெருமளவு நடந்து வருகின்றது. இவ்வாறு குறித்த அப்பாவிகளை ஏமாற்றுபவர்கள் வேறு யாருமல்ல. எமது இனத்தைச் சேர்ந்த கோடரிக் காம்புகளே தற்போது இந்த நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவு வட்டுவாகலைச் சேர்ந்த நாகராசா காண்டீபன் என்பவரையும் அவருடன் சேர்ந்த இன்னும் நான்கு பேரையும் வெளிநாட்டு ஆசை காட்டி கள்ள வழியால் கொண்டு சென்றுள்ளார் கனடாவில் குடும்பமாக வசிக்கும் கமலநாதன் என்பவர். இவர் கமலநாதன் உட்பட்ட 5 பேரையும் துருக்கியில் இறக்கி அந்நாட்டைச் சேர்ந்த நாடு கடத்தும் குழுவிடம் ஒப்படைத்ததாகத் தெரியவருகின்றது. ஆனால் கமலநாதன் இவர்களை சுவிஸ்லாந்துக்கு அனுப்புவதற்கான பணத்தை அந்தக் குழுவிடம் கையளிக்கவில்லை என்பதும் அத்துடன் அதற்கு முன்னரும் இவ்வாறானவர்களால் சுவிஸ்லாந்திற்கு கடத்தி ஏனையவர்களின் பணத்தையும் கமலநாதன் குழுவினர் கொடுக்கவில்லை. இதனால் கடும் கோபத்திற்குள்ளான துருக்கியைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் நாகராசா காண்டீபனையும் அவருடன் சேர்ந்த ஏனைய நான்கு பேரையும் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.
இச் சித்திரவதை தாங்க முடியாது நாகராசா காண்டீபன் நேற்று மரணமாகியுள்ளார். ஏனைய நான்கு பேரும் கடத்தல்காரர்களிடம் இருந்து தப்பிச் சென்று துருக்கிப் பொலிசாரிடம் சரணடைந்துள்ளனர்.
இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் அப்பாவித் தமிழருக்கு வெளிநாட்டு ஆசையை ஊட்டி அவர்களிடம் இருந்து பெருமளவு பணத்தைப் பெற்று இவ்வாறான உயிராபத்து மிக்க செயற்பாடுகளையும் ஏமாற்று வேலைகளையும் புலம்பெயர் நாட்டில் உள்ள தமிழர்கள் சிலரும் இங்குள்ள சில தமிழர்களும் சிலரும் சேர்ந்து செய்து வருகின்றனர். இவர்களை அடையாளப்படுத்தி அருமருந்தான உயிரையும் சொத்துக்களையும் காப்பாற்றிக் கொள்ளல் அவசியம்.
சுவிஸ்லாந்துக்கு போகமுற்பட்ட முல்லையைச் சேர்ந்தவர்களுக்கு துருக்கியில் நடந்த சித்திரவதை! ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment