36 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் அமைச்சரின் கையில் இலங்கை பொலிஸ் திணைக்களம்....
இலங்கையில் 36 ஆண்டுகளுக்குப் பின், தமிழ் அரசியல்வாதி ஒருவரின் கட்டுப்பாட்டில், பொலிஸ் திணைக்களம் தற்காலிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது.
சட்டம், ஒழுங்கு பதில் அமைச்சராக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இதன் பிரகாரம், பொலிஸ் திணைக்களம் அமைச்சர் சுவாமிநாதனின் தற்காலிக கட்டுப்பாட்டில் உள்ளது. இரண்டு வாரங்களுக்கு இவரிடம் இந்தப் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன பதவியில் இருந்த போது, 1980ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி, உள்நாட்டலுவல்கள் அமைச்சராக, கே.டபிள்யூ தேவநாயகத்தை நியமித்திருந்தார்.
அதன் போது, பொலிஸ் திணைக்களம் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வந்தது.
அதற்குப் பின்னர், பொலிஸ் திணைக்களத்தை கட்டுப்படுத்தும் அமைச்சு எதுவும் கடந்த 36 ஆண்டுகளில் தமிழர் எவருக்கும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்தநிலையில், தற்போது சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க வெளிநாடு சென்றிருப்பதால், தற்காலிகமாக பொலிஸ் திணைக்களம் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் வசம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
36 ஆண்டுகளுக்குப் பின் தமிழ் அமைச்சரின் கையில் இலங்கை பொலிஸ் திணைக்களம்....
Reviewed by Author
on
April 19, 2016
Rating:
Reviewed by Author
on
April 19, 2016
Rating:


No comments:
Post a Comment