அண்மைய செய்திகள்

recent
-

திருக்கேதீஸ்வர ஆலயத்தை மாசுபடுத்தும் விசமத்தனமான பிரசுரங்கள்! நிர்வாகம் கண்டனம்!

திருக்கேதீஸ்வர ஆலயத்திற்குரிய பசுக்களும் எருதுகளும் வதை செய்யப்பட்டதாக பத்திரிகைகளிலும் துண்டுப்பிரசுரங்களிலும் விசமத்தனமான பொய்ப்பிசாரங்கள் நடத்தப்படுவதுடன், நிதி நெருக்கடி காரணமாக ஆலயத்தின் பசுக்கள் விற்பனை என ஆலய நிர்வாகத்தின் பெயரில் ஒரு பொய்யான அநாமதேய துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இவையெல்லாம் ஒரு புனிதத்தலத்தின் மகிமைக்கு மாசுபடுத்தும் செயல்கள், அவை மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியவையாகும்.

ஆலயத்தில் ஏதேனும் தவறு நடந்திருந்தது எனக் குற்றச்சாட்டு கிடைத்தால் ஆலய நிர்வாகத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதை அறியத்தருகின்றோம்.

திருப்பணிச்சபை அங்கத்தவர்களினால் தெரிந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றது.

அவ்வாறு தொடர்ந்தும் செயற்படும் என்பதனை சகலருக்கும் உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம்.

இவ்வாறு ஆலய அறங்காவலர்சபை தலைவர் மா.தவயோகராசா அவர்களும், ஆலய திருப்பணிச்சபைத் தலைவர் கந்தையா நீலகண்டன் அவர்களும்  திருக்கேதீஸ்வர ஆலயத்தின் சார்பாக நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக பத்திரிகை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலயத்தை மாசுபடுத்தும் விசமத்தனமான பிரசுரங்கள்! நிர்வாகம் கண்டனம்! Reviewed by Author on April 01, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.