இந்திய உணவை சாப்பிட மறுத்த பிரித்தானிய இளவரசி...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன் அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் அவருடைய மனைவியான கேட் மிடில்டன் ஆகிய இருவரும் ஒரு வார சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு சென்றுள்ளனர்.
நேற்று மும்பையை வந்தடைந்த அரச குடும்பத்தினருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிய இருவரும் இந்திய மக்களை அசர வைத்தனர்.
இந்நிலையில், மும்பையில் அரச குடும்பத்தினருக்கு விஷேச உணவு அளிக்க திட்டமிடப்பட்டு இந்தியாவின் பாரம்பரிய உணவான தோசையை அவருக்கு வழங்கப்பட்டது.
இந்திய நகரங்களில் ஒன்றான பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்ட சமையல் இயந்திரத்தில் பிரித்தானிய இளவரசரான வில்லியம்ஸ் தான் இந்த தோசையை சமைத்துள்ளார்.
இளவரசர் சமைத்த தோசையை ஒரு தட்டில் வைத்து இளவரசி கேட் மிடில்டன்னிற்கு இளவரசர் கொடுக்க முயன்றபோது, அதனை அவர் சிரித்துக்கொண்டே வேண்டாம் ஒன்று ஒதுக்கியுள்ளார்.
இளவரசியின் இந்தச் செயல் அங்குள்ளவர்களை சிறிது முகம் சுழிக்க வைத்தாலும், அவர் தோசை சாப்பிட மறுத்ததற்கு மற்றொரு காரணம் கூறப்படுகிறது.
உணவு பரிமாரப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இளவரசி 1,700 பவுண்ட் விலை உள்ள உயர் ரக உடுப்பினை அணிந்திருந்ததால், அதில் கறைப்பட்டு விடுமோ என்ற சந்தேகத்தில் தான் அவர் தோசையை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இளவரசர் வில்லியம்ஸிடம் தோசை கொடுக்கப்பட்டபோது, அதனை அவர் ஆர்வமாக சாப்பிட்டு ‘மிகவும் சுவையாக உள்ளது’ என உணவு பரிமாரியவரிடம் கூறி உற்சாகப்படுத்தியுள்ளார்.
இந்திய உணவை சாப்பிட மறுத்த பிரித்தானிய இளவரசி...
Reviewed by Author
on
April 11, 2016
Rating:

No comments:
Post a Comment