அண்மைய செய்திகள்

recent
-

ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை ஊடகத்துறை அமைச்சர் பெற்றுக்கொடுப்பாரா?


நாட்டிலுள்ள வெகுசன ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள்வழங்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஊடகத்துறை அமைச்சர் ஊடகவியலாளர்களுக்கான மோட்டார்சைக்கிள் கிடைக்க பொறுப்பான நடவடிக்கை எடுப்பாரா அல்லது சாக்குப்போக்குச்சொல்லி ஏமாற்றி விடுவாரா? என மோட்டார் சைக்கிளுக்காக தெரிவுசெய்யப்பட்டும்மக்கள் வங்கியால் பணம் வழங்கப்படாத ஊடகவியலாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள்.

அரசினால் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்குவதாகக் கூறிஊடகவியலாளர்களை கொழும்பில் தகவல் ஊடகத்துறை அமைச்சிற்கு அழைத்துநேர்முகப்பரீட்சை மூலம் செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு மக்கள் வங்கிகளினூடாகஇலகு தவணைக் கடன் பெற்று மோட்டார் சைக்கிளை வாங்குமாறு கடிதங்கள் மூலம்தெரிவித்த ஊடகத்துறை அமைச்சின் வேண்டுகொளை மக்கள் வங்கிகள் ஏற்காமல்ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிளுக்கான பணத்தை வழங்க மறுத்து இழுத்தடித்துவருகின்றன.

இவ்விடயம் தொடர்பில் மோட்டார் சைக்கிளைப் பெற்றுக்கொள்வதற்காக மக்கள்வங்கிக்கும் ஏனைய அலுவலகத்துக்கும் அலைந்து திரிந்த ஊடகவியலாளர்களால்ஊடகத்துறை அமைச்சருக்குத் தெரியப்படுத்தப்பட்ட போதிலும் ஊடகவியலாளர்களுக்குமோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறும் ஊடகத்துறை அமைச்சரும் மக்கள்வங்கிகள் பணம் தந்தால் பெற்றுக்கொள்ளுங்கள் தராதுவிட்டால் எமக்கு அதைப்பற்றித் தெரியாது என்னும் நிலையில் பொறுப்பற்று இருப்பதாக குற்றம்சுமத்தப்படுகின்றது.

ஊடகவியலாளர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை ஊடகத்துறை அமைச்சர் பெற்றுக்கொடுப்பாரா? Reviewed by Author on April 29, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.